Vijay: சினிமாவுக்காக விஜய் என்ற பெயரில் அறிமுகமாகி இன்று உச்ச நடிகர் அந்தஸ்தில் இருப்பதால் அனைவருக்கும் இந்த பெயரிலேயே அவர் பரிச்சயமாகி விட்டார். உண்மையில் அவருடைய இயற்பெயர் ஜோசப் விஜய் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இவ்வளவு காலமாக இது சர்ச்சை ஆகாத நிலையில் அவர் அரசியலுக்கு வந்த பிறகு அதிகரித்துள்ளது. அதிலும் மத்திய ஆளும் கட்சியினர் இந்த பெயரை சொல்லி அவரை திரும்பத் திரும்ப அடையாளப்படுத்துவது ஏன்?
ஜோசப் விஜய் அப்படின்னா என்ன கெட்ட வார்த்தையா? எதற்காக அவர் மீது இப்படி ஒரு சாயத்தை பூச வேண்டும்? தமிழக வெற்றிக்கழகத்திற்கு எதிரான இந்த ஆயுதம் தேவைதானா? இப்படி பல கேள்விகள் மக்கள் மனதில் இருக்கிறது.
ஜோசப் விஜய்னா என்ன கெட்ட வார்த்தையா.?
உண்மையில் இது யோசிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. மத்திய ஆளும் கட்சி வெளி மாநிலங்களில் இந்த ஆயுதத்தை வைத்து தங்களுக்கு தேவையானதை சாதித்து வருகின்றனர்.
அதேபோல் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என அவர்கள் சில வருடங்களாக முயற்சி செய்து வருகின்றனர். அதன் பிறகு தான் ஜோசப் விஜய் என்ற பெயர் சர்ச்சை வட்டத்திற்குள் வந்துள்ளது.
இதை வைத்து ஒரு சமூகத்தை காரணம் காட்டி விஜய்க்கு ஓட்டு போகக்கூடாது என்ற திட்டமும் இருக்கிறது. ஆனால் விஜயின் அரசியல் செல்வாக்கு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துள்ளது.
சமூகத்தில் நடக்கும் பல பிரச்சினைகளுக்கு எதிராக இவர் நேரடி குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற அரசியல் கட்சிகள் அவரை வளர விடாமல் செய்வதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் ஒன்றுதான் இந்த ஜோசப் விஜய் என்ற பெயரை முன் வைத்து நடக்கும் விவாதம். ஆனால் இந்த காரணத்தால் மக்கள் மத்தியில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது தான் உண்மை. இதுவே பொதுவான மக்களின் கருத்தாகவும் உள்ளது.