விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியல் தான் மக்களின் பேவரிட் சீரியலாக முத்திரை பதித்தது. இதற்கு காரணம் விஜய் மற்றும் காவிரியின் கெமிஸ்ட்ரி மக்களை கவர்ந்ததால் விகா என்று ட்ரெண்டிங் ஜோடியாக விருதுகளை வாங்கி குவித்தார்கள். ஆனால் அப்படிப்பட்ட சீரியல் தற்போது சொதப்பி கொண்டு வருகிறது.
அதாவது விஜய் காவேரி இருவரும் ஒருத்தரை ஒருத்தர் காதலித்து காதலே அவர்கள் சொல்ல வரும்பொழுது வெண்ணிலா கேரக்டர் வைத்து பிரச்சினை வந்தது. இதை வைத்து பல மாதங்களாக இழுத்த நிலையில் தற்போது வெண்ணிலா பிரச்சனை முடிவுக்கு வந்த பிறகு இவர்கள் ஒன்று சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிலும் பிரச்சினை கொடுக்கும் விதமாக பசுபதியை வைத்து காய் நகர்த்தி காவேரி விஜயும் ஒன்று சேராதபடி பிரிந்து இருக்கிறார்கள். அட்லீஸ்ட் காவிரி கர்ப்பமாக இருக்கிற விஷயமாவது எல்லாத்துக்கும் தெரிய வேண்டும். அப்பொழுது பாட்டி சித்தி இருவரும் சேர்ந்து விஜய்யுடன் காவிரி சேர்த்து வைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் அதுவும் தெரியாமல் பசுபதி கொடுத்த டார்ச்சுரல் சாரதா, மகள்களை கூப்பிட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்பா ஆசைப்பட்ட மாதிரி உங்க கனவை நிறைவேற்றி வாழ்ந்து ஜெயிக்க வேண்டும் என்று சத்தியத்தை வாங்குகிறார். அந்த வகையில் அப்பா ஆசைப்பட்ட விஷயத்தையும் அம்மா வாங்கின சத்தியத்தை நிறைவேற்றும் விதமாக போராடப் போகிறார்கள்.
ஆக மொத்தத்தில் நிவின் யமுனா கூட வாழப்போவதில்லை, விஜய்யுடன் காவிரி சேரப் போவதில்லை இப்படி எல்லா விஷயமும் சொதப்பிக்கொண்டு வருவதால் விஜய்யின் கேரக்டர் டம்மி ஆகிவிட்டது. அத்துடன் இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கிலும் சரிவை சந்தித்து இருக்கிறது. அதற்கு காரணம் விஜய் என்கிற சுவாமிநாதன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலை தெலுங்கில் ஆட்டோ சாந்தி என்ற சீரியல் மூலம் நடிப்பதில் பிஸியாகிவிட்டார்.
அதே மாதிரி மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன், விஜய் டிவியில் புத்தம் புது சீரியல் ஆன தனம் பாக்கியா என்ற சீரியலை எடுப்பதில் பிஸியாகிவிட்டார். இப்படி இவர்கள் இரண்டு பேரும் மற்ற சீரியலில் பிஸியாகி இருப்பதால் மகாநதி சீரியலை டீலில் விட்டுவிட்டார்கள்.