Snegha and Varlalakshmi: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக இறுதி கட்டத்துடன் ஆரம்பமானது. இதில் இறுதி இடத்தில் தேர்வானவர்கள் ஐந்து போட்டியாளர்கள். அந்த வகையில் தில்லை- பிரீதா, நிதின்- தித்ய பந்தே, பிரஜ்னா- ககனா, திலீப்- மெர்சினா, ஜானுஷிகா- சபரிஷ்.
இதில் நடனத் திறமையால் பார்ப்பவர்களை மிரளவைத்த நிதின் தான் வெற்றி பெற்று இருக்கிறார். இவருக்கு 10 லட்ச ரூபாய் பரிசு தொகை கிடைத்திருக்கிறது. இந்த பணத்தை இவருடைய அப்பா கிட்னி ஆபரேஷனுக்காக செலவு செய்வதாக கூறியிருந்தார்.
ஆனால் சினேகா மேடைக்கு வந்து நிதின் இடம், உங்க அப்பா கிட்டி ஆபரேஷன் சம்பந்தமாக இரண்டு மருத்துவமனையில் பேசி வைத்திருக்கிறேன். அவருக்கு ஏற்ற கிட்னி கிடைத்தவுடன் உங்க அப்பாவுக்கு ஆபரேஷன் செய்து விடலாம். செலவை பற்றி நீ யோசிக்க வேண்டாம். எல்லா செலவையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார்.
அதனால் வெற்றி பெற்ற பத்து லட்ச பணமும் இவருக்கு முழுமையாக கிடைத்து விடும். இவரை தொடர்ந்து பஞ்சமிக்கு டைட்டில் வின்னர் பட்டம் கிடைக்கவில்லை என்றாலும் இவருக்கு உதவி செய்வதற்கு நான் நீ என்று போட்டி போட்டு அனைவரும் முன்வந்திருக்கிறார்கள். அதாவது சினேகா, பஞ்சமியின் மகன்களுக்கு சீர்வரிசை கொடுக்கிறேன் என்று பரிசுகளை கொடுத்திருக்கிறார்.
அத்துடன் வரலட்சுமி சரத்குமார், பஞ்சமிக்கு சொத்து எழுதிக் கொடுத்து அந்த பத்திரத்தையும் அவர் கையில் அன்பளிப்பாக கொடுத்து இருக்கிறார். மேலும் ஜீ தமிழ் சேனல் அவருடைய பங்குக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலில் பஞ்சமிக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்கு தகுந்த வாய்ப்பு கொடுக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். இப்படி போட்டி போட்டு அதில் பங்கு பெற்ற போட்டியாளர்களுக்கு சினேகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் பல உதவிகளை செய்து அசத்திருக்கிறார்கள்.