Madhampatty Rangaraj: ‘ யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே’ என்று கண்ணதாசன் எழுதி இருப்பார். அப்படி ஒரு நிலைமை தான் தற்போது மாதம்பட்டி ரங்கராஜுக்கு. விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு காலத்தில் ஒட்டு மொத்த ரியாலிட்டி ஷோக்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது.
திடீரென இந்த சேனலில் இருந்து CWC புரொடக்சன் நிறுவனம் மீடியா மேசன் சன் டிவியுடன் கைகோர்த்தது. அந்த சமயத்தில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை மக்கள் பெரிதும் விரும்பி பார்த்ததற்கு ஒரே காரணமாக இருந்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவருக்கென்று தனியாக ரசிகர் கூட்டமும் இருந்தது.
தற்போது ஆறாவது சீசன் விஜய் டிவியில் போய்க் கொண்டிருக்கும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய ஆடை வடிவமைப்பாளர் ஜாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
ப்ரோமோவில் இத கவனிச்சீங்களா?
இந்த திருமண செய்தி சமூக வலைத்தளத்தில் புயல் போல் அடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சன் டிவி டாப் குக் டூப் குக் இரண்டாவது சீசனை ஆரம்பித்திருக்கிறது. இதில் குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டியை சீண்டிப் பார்ப்பது போல் இப்போ ரெண்டு தானே ட்ரெண்ட் என்ற வசனத்துடன் அந்த ப்ரோமோ இருக்கிறது.
ஜி பி முத்து வரும் அந்த வீடியோவில் அவருடைய வீட்டு கோழி ஒரு முட்டை இடுகிறது. அந்த முட்டையை உடைத்து பார்க்கும் போது அதில் இரண்டு மஞ்சள் கரு இருக்கிறது. எல்லா முட்டையிலும் அப்படி இருப்பதால் அந்த முட்டையை எடுத்துக்கொண்டு ஜி பி முத்து டாக்டரிடம் செல்கிறார்.
டாக்டர் அதை பார்த்துவிட்டு இது நல்ல விஷயம் தானே, கோழி ட்ரெண்டுக்கு வந்துடுச்சு, இப்போ ரெண்டு தானே ட்ரெண்டு என சொல்வது போல் இந்த வீடியோ இருக்கிறது.

இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் இதில் மாதம்பட்டி ரங்கராஜை தான் குறி வைத்து சன் டிவி இப்படி ஒரு கன்டென்ட் கொண்டு வந்திருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
எது எப்படியோ ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். அப்படித்தான் தங்களுக்கு போட்டியாளராக இருக்கும் சேனலில் ஏதாவது தகராறு நடந்தால் இவர்களுக்கும் கொண்டாட்டம் தானே.