Serial Trp Rating: சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று சொல்வதற்கு ஏற்ப ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று வருகிறது. முக்கியமாக கடந்த வாரம் எதிர்நீச்சல் 2 பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் கெத்து காட்டிவருகிறது. அந்த வகையில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்களை பற்றி பார்க்கலாம்.
சிறகடிக்கும் ஆசை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இந்த ஒரு சீரியல் தான் தொடர்ந்து சன் டிவியுடன் போட்டி போட்டுக் கொண்டு முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 8.23 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
கயல்: கடந்த சில மாதங்களாக மூன்றாவது இடத்தில் இருந்த கயல் இந்த வாரம் 8.31 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திற்கு போயிருக்கிறது. அரச்ச மாவை அரைத்துக் கொண்டு எல்லா பொறுப்பையும் தலைமேல் சுமந்து கொண்டு போராடும் கயல் சீரியல் மக்களுக்கு அதிகளவில் போர் அடித்து விட்டது. ஆனாலும் எழில் கேரக்டருக்காக மட்டுமே மக்களின் ஆதரவு கிடைத்து வருகிறது.
எதிர்நீச்சல் 2: விட்ட இடத்தை பிடித்து விட்டது என்பதற்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக போராடி இந்த வாரம் 8.36 புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தை பிடித்து விட்டது. தற்போது கதை விறுவிறுப்பாகவும், இந்த மாதிரி கதை தான் எங்களுக்கு வேணும் என்று மக்கள் எதிர்பார்த்தபடி கதைகள் நகர்ந்து வருவதால் வெற்றியை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டது.
மூன்று முடிச்சு: சுந்தரவல்லிக்கு எதிராக சூர்யா போடும் ஒவ்வொரு ஸ்கெச்சிலும் நந்தினி தான் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். நந்தினிக்காக என்ன வேணாலும் பண்ணுவேன் என்று சூர்யா செய்யும் ஒவ்வொரு விஷயமும் சுந்தரவல்லியை கோபப்படுத்துகிறது. இதை தாண்டி குடிப்பதை நிறுத்திவிட்டு நந்தினி மீது உண்மையான காதலை காட்டி பொறுப்பான கணவராக நடந்து கொண்டால் இன்னும் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். இந்த வாரம் 9.35 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சிங்க பெண்ணே: கோகிலா கல்யாணத்திற்காக அனைவரும் ஆனந்தியின் கிராமத்திற்கு போயிருக்கிறார்கள். கோகிலா கல்யாணம் முடிந்த கையோடு ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிவிட வேண்டும் என்று அன்பு காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இதில் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக பல சூழ்ச்சிகள் ஆரம்பமாகி இருக்கிறது. அன்புவின் அம்மா லலிதாவும் ஆங்கே போகிறார். அதனால் நிச்சயம் லலிதா கண் முன்னாடி அன்பு ஆனந்தி கழுத்தில் தாலி கட்டி விடுவார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.73 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.