டைட்டிலில் ட்விஸ்ட் வைத்த RJ பாலாஜி.. சூர்யா 45 கதை இதுவா.? – Cinemapettai

Tamil Cinema News

Suriya 45: சூர்யா ஆர்ஜே பாலாஜி படத்தை முடித்த கையோடு 46வது பட சூட்டிங் சென்று விட்டார். ஆனால் இப்போது வரை 45 வது படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு வரவில்லை.

பெயர் கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை. இறுதிவரை சஸ்பென்ஸ் ஆகவே அதை வைத்திருக்கிறது பட குழு. ஆனாலும் படத்தின் பெயர் வேட்டை கருப்பு என்ற செய்தி சில மாதங்களாக மீடியாவில் சுற்றி வருகிறது.

ஆனால் இப்போது பார்த்தால் RJ பாலாஜி அந்த பெயரை வைக்கவில்லையாம். ஊடகங்களில் விஷயம் கசிந்து விட்டதால் வேட்டை கருப்பு என்ற பெயரை கருப்பு என்று மாற்றிவிட்டதாக செய்திகள் வந்துள்ளது.

சூர்யா 45 கதை இதுவா.?

வரும் ஜூன் 20 அவருடைய பிறந்தநாள் அன்று படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதில் படத்தின் பெயரும் வெளியாக இருக்கிறது. அது மட்டும் இன்றி இது எந்த மாதிரியான கதை என்றும் சில தகவல்கள் கசிந்து வருகிறது.

முதலில் சூர்யா 2 வேடங்களில் நடிப்பதாக பேசப்பட்டது. சாமியாகவும் மனிதனாகவும் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது கடவுள் வழக்கறிஞர் அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவது போன்ற கதையாம்.

சிங்கம் படத்திற்கு பிறகு இப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியாக இருக்கும். இடையில் சில படங்கள் அவருக்கு நெகட்டிவாக அமைந்துவிட்டது.

ஆனால் இப்படம் நிச்சயம் அவருடைய கேரியரில் முக்கியமானதாக இருக்கும் என்கின்றனர். இதுவே டீசர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.