தக் லைஃப் முதல் நாள் கலெக்ஷன் கணிப்பு.. விக்ரம், பொன்னியின் செல்வன் வசூலை முறியடிக்குமா.? – Cinemapettai

Tamil Cinema News

Kamal : மணிரத்னம், கமல் கூட்டணியில் நாயகன் படத்திற்கு பிறகு 38 வருடம் கழித்து உருவாகி இருக்கிறது தக் லைஃப் படம். இந்த படத்தில் திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

2025 ஆம் ஆண்டு வெளியாகும் மிகப்பெரிய படம் என்றால் அது இப்படம் தான். இந்த படம் டிக்கெட் முன்பதிவிலேயே நல்ல வசூலை பெற்றது. இந்த சூழலில் முதல் நாளில் எவ்வளவு கலெக்ஷன் செய்யும் என்ற கணிப்பு வெளியாகி இருக்கிறது.

லோகேஷ், கமல் கூட்டணியில் வெளியான விக்ரம் படம் முதல் நாளில் 33 கோடி வசூலை பெற்றிருந்தது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் முதல் நாளில் கிட்டத்தட்ட 35 கோடி வசூலை பெற்றிருந்தது.

கமலின் தக் லைஃப் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் கணிப்பு

இந்த சூழலில் 36லிருந்து 38 கோடி வசூலை முதல் நாளில் தக் லைஃப் படம் பெரும் என்று கூறப்படுகிறது. மேலும் கமல் சென்னையில் தக் லைஃப் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் சில விஷயங்களை பேசியிருந்தார். அதாவது தமிழில் இருந்து தான் கன்னட மொழி தோன்றியதாக கூறினார்.

இது கர்நாடகாவில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில் கமல் மன்னிப்பு கேட்டால் தான் இங்கு தக் லைஃப் திரையிடப்படும் என்று கூறினார். கமல் மன்னிப்பு கேட்க தயாராக இல்லாத நிலையில் கர்நாடகாவில் இந்த படத்தின் வெளியிட ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆகையால் தக் லைஃப் வசூல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை காட்டிலும் முதல் நாள் வசூல் கண்டிப்பாக அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. நாளை வெளியாக உள்ள தக் லைஃப் படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.