விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் கர்ப்பம் என்று தெரிந்தது ஆஸ்பத்திரிக்கு போய் செக்கப் பண்ணாமல் ஒரு மாதம் கழித்து குடும்பத்துடன் சேர்ந்து செக் பண்ணி பார்க்கப் போகிறார்கள். இந்த விஷயத்தை கேள்வி பட்டதிலிருந்து சரவணன் தங்கமயில் சொன்ன பொய்கள் எல்லாத்தையும் மறந்து பொண்டாட்டியை மன்னித்து ஏற்று சந்தோஷமாக இருந்தார்.
ஆனால் தற்போது அதற்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக ஆஸ்பத்திரிக்கு செக்கப் போன தங்கமயில் கர்ப்பம் இல்லை என்று டாக்டர், குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி சொல்லிவிடுகிறார். இதனால் சரவணன், தங்கமயில் சொன்னது பொய் என்று நினைத்து ஏமாற்றி விட்டதாக தங்கமயில் மீது மறுபடியும் கோபப்படுகிறார். ஆனால் இந்த விஷயத்தை தங்கமயில் எதிர்பார்க்கவில்லை அந்த அளவுக்கு ஏமாற்றுத்துடன் போய்விட்டது.
தற்போது ஒட்டுமொத்த குடும்பமும் கவலையில் இருக்கும் பொழுது பாண்டியன் குடும்பத்துக்கு வாரிசு கொடுக்கும் விதமாக மீனா கர்ப்பமாக போகிறார். ஆனால் தங்க மயிலின் நிலைமை என்னவாக இருக்கப்போகிறது என்று கேள்விக்குறியாகிவிட்டது. ஏனென்றால் சரவணன் ஏற்கனவே தங்கமயில் மீது கோபத்தில் இருந்தார்.
தற்போது தங்கமயில் கர்ப்பம் என்று ஒட்டுமொத்த குடும்பத்தையும் நம்ப வைத்து பொய் சொன்னது பாக்கியம் தான் என்று மாமியார் குடும்பத்தை வெறுக்கும் அளவிற்கு சரவணன் கோபப்பட போகிறார். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தங்கமயில் தவிக்கப் போகிறார். ஆனால் தங்கமயில் கர்ப்பம் ஆனதும் பாக்கியமும் தங்கமயிலும் கொஞ்சம் ஓவராக தான் ஆடினார்கள். இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு ஏமாற்றம் நடந்து விட்டது.