Gossip: அந்தப் பிரபலம் சில படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறார். அதுதான் அவருக்கு இன்று வரை அடையாளமாக இருக்கிறது.
அதை வைத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் சென்றுவிட்டார். அவருக்கு ஏகப்பட்ட இளம் பெண்கள் ரசிகைகளாக இருக்கின்றனர். ஆனால் இப்போது அவர் பற்றி வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரிய இடத்துப் பிள்ளையான இவர் திருமணம் குழந்தை குட்டி என செட்டில் ஆனவர். ஆனால் இப்போது பார்த்தால் அவசர அவசரமாக காதலியை திருமணம் செய்த கையோடு குழந்தை வரப் போகிறது என்று வேற ஷாக் கொடுத்துள்ளார்.
தண்டவாளத்தில் ஏறிய வண்டவாளம்
முதல் திருமணமே இன்னும் முறையாக விவாகரத்து ஆகவில்லை. அதற்குள் அடுத்தடுத்த அதிர்ச்சியை நடிகர் கொடுத்து வருகிறார். இதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்ததில் பகீர் தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தனக்கு நெருக்கமான பெண்ணுடன் அவர் நட்பை வளர்த்துள்ளார். அது இன்னும் நெருக்கமான நிலையில் அந்தப் பெண் கருவுற்று இருக்கிறார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த நடிகர் அப்படியே கழட்டி விட தான் பார்த்தாராம். ஆனால் அந்த பெண் உஷாராக தாலி கட்டியே ஆக வேண்டும் என மிரட்டி திருமணம் வரை கொண்டு சென்றிருக்கிறார்.
நடிகர் இப்போது அதிக பிரபலமாக இருப்பதால் அதை கெடுத்து கொள்ள வேண்டாம் என்று வேறு வழியில்லாமல் தாலி கட்டி விட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.
ஏற்கனவே இது அரசல் புரசலாக பேசப்பட்டது.
நடிகர் தரப்பில் இருந்து அப்படியெல்லாம் எதுவும் இல்லை என சமாளித்தார்கள். ஆனால் இப்போது அவருடைய வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது.