Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்கள் கொஞ்சம் கொஞ்சமாக டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் வெளியான டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி சீரியல் அதிகளவில் மக்களை கவர்ந்திருக்கிறது.
எப்பொழுதுமே விஜய் டிவியில் சிறகடிக்கும் ஆசை சீரியல்தான் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கும். ஆனால் “வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்” என்ற பழமொழிக்கேற்ப சிறகடிக்கும் ஆசை சீரியல் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டது.
ஆரம்பத்தில் எதார்த்தமான கதையாகவும், ஆர்டிஸ்டிகளின் நடிப்பு மக்களை கவர்ந்து பேவரிட் சீரியலாக உயரத்தில் இருந்தது. ஆனால் ரோகிணி கதை மறைமுகமாக இழுத்தடித்துக் கொண்டு போனதனாலும், அழுமூஞ்சி மாறி எப்ப பாத்தாலும் மீனா அழுது கொண்டே இருந்ததாலும், மூர்க்கத்தனமாக முத்துவின் நடிப்பு அமைந்ததாலும் மொத்தமாக இந்த நாடகம் வெறுக்கும்படி அமைந்துவிட்டது.
அதனால் தான் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்கும் ஆசை சீரியல் விஜய் டிவியின் மூன்றாவது இடத்திற்கு போய்விட்டது. இதற்கு பதிலாக கடந்த வாரம் அரசி செய்த சம்பவத்தால் பாண்டியனுக்கு ஜாக்பாட் அடிக்கும் விதமாக முதலிடத்தில் வந்திருக்கிறது. 7.68 புள்ளிகளைப் பெற்று விஜய் டிவியின் சிம்மாசனத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இடம் பிடித்திருக்கிறது.
அடுத்ததாக 7.49 புள்ளிகளை பெற்று அய்யனார் துணை சீரியல் இரண்டாவது இடத்திலும், 7.32 புள்ளிகளை பெற்று சிறகடிக்கும் ஆசை சீரியல் மூன்றாவது இடத்திலும், மகாநதி சீரியல் 6.71 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திலும், 5.59 புள்ளிகளை பெற்று சித்த மருமகள் சீரியல் ஐந்தாவது இடத்திலும், 4.56 புள்ளிகளை பெற்று பாக்கியலட்சுமி சீரியல் ஆறாவது இடத்திலும் இருக்கிறது. இப்படியே போனால் சன் டிவி சீரியல் டம்மி ஆகி விஜய் டிவி சீரியல் முதல் இடத்திற்கு வந்துவிடும்.