தனம் நிலாவிடம் இன்னைக்கு சாயந்திரம் உன்ன பிக்கப் பண்றதுக்கு ஏற்கனவே ஒருத்தங்க வந்தாங்க இல்ல அம்மு ஆண்டி அவங்க தான் வருவாங்க என்று சொல்கிறாள்.
ஆட்டோவை சர்வீஸ் கொடுக்க போறேன். ஆட்டோ கிடைக்கிறதுக்கு ரெண்டு நாள் ஆகும் அதனால் நாளையில இருந்து ஆட்டோ ஓட்ட மாட்டேன். அதுவரைக்கும் பாப்பாவை கூட்டிட்டு போறதுக்கு அம்மு ஆண்டி வருவாங்க என்று தனம் சொல்கிறாள்.
அப்போ நீங்க பங்ஷனுக்கு வரமாட்டீங்களா நிலா கேட்க உடனே தனம் நிலா பாப்பாவோட பர்த்டே க்கு தனமா வராம இருப்பேனா சாயங்காலம் கண்டிப்பா தனம்மா பர்த்டேக்கு வந்துருவேன். ஆனா ஸ்கூல்ல பிக்கப் பண்றதுக்கு ஆண்டிதான் வருவாங்க என்று சொல்கிறாள்.
சௌந்தர்யா கல்யாணம்
அந்நேரம் சண்முகம் தனத்திடம் சௌந்தர்யா கல்யாண விஷயமா பேச தனமோ நான் எவ்வளவோ பேசி பார்த்த சண்முகம். ஆனா அத்தை இந்த சம்மதம் வேண்டாம் இதெல்லாம் சரி வராது என்று தனம் சொல்கிறாள்.
உங்களுக்கும் சௌந்தர்யாவுக்கும் கல்யாணம் பண்ண முடிவெடுத்து அவ அந்த வாழ்க்கையே வேண்டாம்ன்னு ஓடி போய் தப்பு பண்ணிட்டா அது எல்லார் மனசுலயும் ஒரு சின்ன வடு இருக்கு.
இப்ப திரும்பவும் எப்படி உங்க ரெண்டு பேருக்கும் கல்யாண பேச்சு பேசுறதுன்னு வேண்டவே வேண்டாம்ன்னு அத்தை சொல்றாங்க சண்முகம். உங்க கல்யாண விஷயத்துல உங்க அப்பா அம்மா என்ன முடிவு எடுக்குறாங்களோ அத நீங்க கேக்குறது தான் நல்லதுன்னு தோணுது என்கிறாள் தனம்.
அதன் பிறகு தனம் புதுசா கட்டிக்கிட்டு இருக்கிற வீட்டை பார்க்க போகிறாள்.
அங்கு மேஸ்திரி மூர்த்தி அதை பேச்சை கேட்டு கலவை தண்ணியா கலக்கி கட்டுறான். அதை பார்த்த தனம் என்ன கலவை இவ்வளவு தண்ணியா இருக்கு ஏன் இப்படி கட்டுறாங்க என்று யோசிக்கிறாள்.
மேஸ்திரியிடம் ஒரு சின்ன சந்தேகம் கோச்சுக்காதீங்க என் மனசுக்கு தோன்றியதை நான் கேட்கிறேன் அந்த சிமெண்ட் கலவை கரெக்டா இல்ல பாக்கும்போது ரொம்ப தண்ணியா இருக்கற மாதிரி இருக்கு. இன்னும் சிமெண்ட்டும் மண்ணும் சேர்க்கணும்னு தோணுது என்று கேக்கிறாள்.
என் பார்வையில நடக்குற வேலையில சந்தேகம் வந்துருச்சா இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன் இங்க நான் மேஸ்திரியா இல்ல நீங்க மேஸ்டரியாமா என்று கோபமா கேட்கிறான்.