Vijay : விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இதுவே விஜய்யின் கடைசி படமாகும்.
அவர் அரசியலில் இறங்கி உள்ளதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழலில் விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்களில் யாராவது ஒருவர் தான் பிடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது விஜய்யின் இடத்தை வேறு ஒரு ஹீரோ பிடிக்க இருக்கிறார்.
அதாவது கிழக்கு சீமையிலே, நாடோடி மன்னன் போன்ற படங்களில் நடித்தவர் தான் விக்னேஷ். இவர் தற்போது ரெட் ஃப்ளவர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கியவர் ஆண்ட்ரூ பாண்டியன். இவர் இதற்கு முன்னதாக ஜெய் நடிப்பில் வெளியான பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
விஜய்யின் இடத்தை நிரப்ப வரும் ஹீரோ
ஆண்ட்ரூ பாண்டியன் எந்திரன் 2 போன்ற படங்களில் சிஜி கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் விஜய்க்காக ஒரு பிரம்மாண்ட கதையை எழுதி இருக்கிறார். அவர் அரசியலுக்கு சென்றதால் அந்த கதையில் விக்னேஷ் நடித்துள்ளாராம்.
அதாவது இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் பெரிய நட்சத்திரம் அல்லது பிரபலம் இல்லாத நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குனர் முடிவு செய்திருந்தாராம். அப்போது விக்னேஷ் படங்களை பார்த்து இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்துள்ளனர்.
விஜய்யின் இடத்தை நிரப்பும் அளவுக்கு விக்னேஷ் வளர்ச்சி பெறுவாரா என்பது ரெட் ஃப்ளவர் படம் வெளியானால் தான் தெரியவரும். மேலும் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகி இருப்பதாகவும், அதற்காக தன்னுடைய எடை குறைத்ததாகவும் விக்னேஷ் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.