Dhanush: சமூக வலைத்தளம் முழுக்க திடீரென தனுசை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் ரவி மோகனால் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. அட இந்த விஷயத்தில் தனுஷ் ரவி மோகனை விட கெட்டிக்காரர்.
இப்படியும் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு தனுஷ் அப்படி என்ன செய்துவிட்டார் என்று தோன்றலாம். நடிகர் ரவி மோகன் சமீபத்தில் அவருடைய ஸ்டூடியோ திறப்பு விழாவை நடத்தி முடித்தார்.
ரவியை விட கெட்டிக்காரர்
சொந்த பந்தம், நட்பு, நட்சத்திரங்கள் என்ன ரவி மோகனுக்கு பாராட்டு மழையை கூடி வந்து கொட்டினார்கள். ஆனால் இதில் ரவி மோகனின் எதிர்காலமாக இருக்கும் அவருடைய மகன்கள் இல்லை. மனைவியை விவாகரத்து செய்திருந்தாலும் மகன்களை ரவி மோகன் அந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்க வேண்டும்.
தனுஷ் தன்னுடைய 17 ஆண்டு கால திருமண வாழ்க்கையை சட்டபூர்வமாக முடித்து விட்டார். ஆனால் அவருடைய முக்கியமான தருணங்களில் அவருடைய மகன்கள் இல்லாமல் இருந்ததே கிடையாது. மேலும் மகன்களுக்காக ஒரு நல்ல அப்பா அம்மாவாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா எப்போதுமே உடன் இருக்கிறார்கள்.
தங்களுக்குள் இருக்கும் ஈகோவை வெளிக்காட்டாமல் மகன்களின் நல்ல தருணங்களில் பெற்றோர்களாக போய் நிற்கிறார்கள். ஒரு வேலை ஆர்த்தி இந்த விழாவுக்கு மகன்களை ரவி அழைத்தும் அனுப்பாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் மகன்களுக்காக மனைவியுடன் ஒரு நல்ல உறவை ரவி மோகன் வைத்திருக்கவில்லை என்பதுதான் பெரிய குற்றச்சாட்டு.
ஒரு கணவன் தன் மனைவியை விட்டு பிரியலாம், ஆனால் ஒரு நல்ல அப்பா பிள்ளைகளை கைவிட்டு விடக்கூடாது. ரவி மோகன் செய்வது தவறான விஷயம் என இணையதள வாசிகள் விமர்சனம் வைத்திருக்கிறார்கள்.