Dhanush : தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை எடுத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை தான் பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகாமல் இருந்தது. இதற்கு காரணம் ஐஸ்வர்யா லால் சலாம் படத்தின் ஹாட் டிஸ்க்கை தொலைந்து விட்டதாக கூறினார்.
அதேபோல் தனுஷுக்கும் முன்பே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது கொலவெறி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நம்பர் ஒன் ட்ரெண்டானது. ஆனால் இந்த பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே யூடியூபில் வெளியாகி விட்டது.
அதாவது கொலவெறி பாடலின் ஹாட் டிஸ்கை யாரோ திருடிவிட்டார்களாம். அதோடு இணையத்திலும் லீக் செய்து விட்டார்கள். இதனால் உடனடியாக அவசர அவசரமாக அந்த பாடலை பட குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.
ஹாட் டிஸ்கை தொலைத்த தனுஷ்
இனி இது போல் ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என தனுஷ் முடிவெடுக்கிறாராம். அதாவது அவர் தயாரிக்கும் மற்றும் இயக்கும் படங்களை எடிட்டிங் வேலை முடிந்தவுடன் ஹாட் டிஸ்கை அவரை எடுத்துச் சென்று விடுவாராம். திரும்ப ஷூட்டிங் வரும்போது தான் எடுத்து வருவாராம்.
இவ்வாறு தினமும் தனுஷ் செய்து வருகிறார். பாடம் கற்றபின் தனுஷுக்கு இந்த புரிதல் வந்திருக்கிறது. ஆகையால் தன்னுடைய படத்தின் எந்த காட்சியும் ரிலீசுக்கு முன்பு வெளியில் செல்லக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார்.
சமீபகாலமாக படப்பிடிப்பில் ரசிகர்களால் எடுக்கப்படும் வீடியோக்களும் வெளியாகிறது. அதேபோல் படம் வெளியான முதல் நாளே இணையத்தில் லீக் செய்து விடுகிறார்கள். இதனால் பலரது உழைப்பு மற்றும் தயாரிப்பாளரின் செலவு ஆகியவை வீணடிக்கப்படுகிறது.