Perarasu : இயக்குனர் பேரரசு அவர்கள் திரையுலகத்திற்கு நிறைய நல்ல திரைப்படங்களை கொடுத்துள்ளார். ஒரு காலகட்டத்தில் இவரது படத்தில் எல்லாமே அனல் பறக்கும் காட்சிகளாக இடம்பெற்றுருகின்றன.
இவர் தற்போது வின்ஸ்டார் விஜய்யின் மக்கள் தொடர்பாளன் என்ற பட விழாவில்பேசியுள்ளார். அந்த பட விழாவில் அவர் கூல் சுரேஷை பற்றியும் பொதுவாக சினிமா துறையும் பற்றி பேசியுள்ளார்.
இவர் இன்று சினிமாவில் இப்போதைக்கு அதிகமாக இல்லாததற்கு காரணம் ஒன்று கதை இன்னொன்று விசுவாசம் இல்லை என்றும் கூறியுள்ளார். கூல் சுரேஷ் எங்கு சென்றாலும் சந்தானம் மற்றும் சிம்பு பேரைத்தான் கூறுவார். அவர் எங்கேயும் சந்தானம் மற்றும் சிம்பு இருவரையும் விட்டு கொடுத்ததில்லை.
கூல் சுரேஷை அழவைத்த பேரரசு..
இவ்வாறு அவர் இப்போதைக்கு சினிமாவில் நன்றியுணர்வு இல்லை என்றும் கூறியுள்ளார். இதனால் கூல் சுரேஷ் மேடை என்று கூட பார்க்காமல் கதறி அழுகிறார். அதுமட்டுமல்லாமல் தான் நடித்த படத்தில் இயக்குனர்களுக்கு நன்றி சொன்ன கூல் சுரேஷை பார்த்து நான் ஆச்சிரியப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இப்போது எந்த ஹீரோவும் தனக்கு ஒருபடத்தில் பெருமை வந்தால் தான் நடித்த நடிப்பிற்கு என்று எண்ணிக்கொள்கிறார்கள். அந்த கதை, இயக்குனர்களை திரும்பி கூட பார்ப்பதில்லை என்றும் நன்றியுணர்வு இல்லை என்றும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தனுஷ், சிம்புக்கு விசுவாசம் இல்லையா?
யார் யாரை மனதில் வைத்து இதையெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார் பேரரசு என்று தெரியவில்லை.வளர்ந்து வரும் நடிகர் தனுஷ் அவர்களை மறைமுகமாக சொல்கிறாரா? அல்லது சிம்பு அவர்களை சொல்கிறாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் தற்போதைய சினிமாவை முன்னாளில் வளர்த்த அனைவருக்கும் இருக்கும் ஆதங்கம் இதுவாகத்தான் இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது.