Cinema : தற்போது ட்ரெண்டிங்கில் வலம் வரும் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என அனைத்து திறைமைகளையும் வைத்து சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் தனுஷ்.
இவரின் “குபேரா” திரைப்படம் ஜூன் 20-ஆம் தேதி திரையில் வெளியாகி தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தனுஷின் தேவா என்ற பிச்சைக்காரன் கதாபாத்திரம் ஒரு தனி வரவேற்பையே கொடுத்தது.
தனுஷின் “இட்லி கடை” திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் தனுஷின் பிறந்தநாள் அன்று முழு தகவல்களும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் H. வினோத் தனது அடுத்த படத்தில் தனுஷ்-ஐ முக்கிய நடிகராக அப்படத்தில் கமிட் செய்துள்ளார். இது விஜயின் ஜனநாயகன் படத்திற்கு அடுத்த தனுஷை வைத்து இந்த படம் எடுக்கப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
டூயட்கள் இருக்காது..
இயக்குனர் விக்னேஷ் ராஜா தனுஷை வைத்து படம் இயக்குவதாக தகவல்கள் வெளியானது. ஆரம்பத்தில் பூஜா ஹெக்டேக் தான் ஹீரோயின் என வதந்தி பரவியது ஆனால் உண்மையிலேயே மமிதா பைஜு தான் முக்கிய ஹீரோயினாக தனுஷ் உடன் ஜோடி போடுகிறார்.
இப்படத்தில் தேவையற்ற காதல் பாடல்கள், டூயட்கள் இல்லை. நல்ல கதையை மையமாக வைத்து மட்டுமே படம் எடுக்கப்படுகிறது. இயக்கப் போகும் இந்த படத்தில் வலைத்தளத்தில் ட்ரெண்டிங்காகும் எந்த விதமான பாடல்கள் இல்லை.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 14 -இல் தொடங்க உள்ளனர். இந்தப் படத்தின் கதை முழுக்கவும் இந்த மாடன் கலையை மையமாகக் கொண்டு இயக்கப்பட உள்ளது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அப்போ தனுஷ் படத்தில் டூயட் பாட்டு இருக்காதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.