தனுஷ் ரஜினி மாதிரி பேசுறாரு, அப்போ பிரதீப்?. மைக்கை பிடித்து ட்ரோல் மெட்டீரியல் ஆயிட்டாரே! – Cinemapettai

Tamil Cinema News

Pradeep Ranganathan: குபேரா ஆடியோ வெளியீட்டு விழாவின் போது தனுஷ் பேசியது மிகப் பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. இதில் யாரை திருப்பி அடிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்த கூட்டத்தில் சிக்கிக்கொண்டார் பிரதீப் ரங்கநாதன்.

நேற்று அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடித்த டிராகன் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய முந்தைய படங்கள், டிராகன் படம் மற்றும் இனி அவருடைய பிளான் என்ன என்பதை பற்றி பேசி இருந்தார்.

ட்ரோல் மெட்டீரியல் ஆயிட்டாரே!

உண்மையிலேயே ஒரு ஹீரோ தொடர்ந்து மூணு படம் ஹிட் கொடுப்பது என்பதெல்லாம் தற்போது தமிழ் சினிமாவில் அசாதாரணமான விஷயம். இதை பிரதீப் ரங்கநாதன் செய்து காட்டியிருக்கிறார்.

அதே நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட அதீத தன்னம்பிக்கையோடு சேர்த்து கொஞ்சம் அதிக பிரசங்கி பேச்சும் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதேபோன்று தனுஷ் ரஜினியை போல் பேசுகிறார் என அவரை கிண்டல் அடித்தார்கள்.

இப்போது பிரதீப் ரங்கநாதன் அச்சு அசல் தனுஷ் போல. பேசிக் கொண்டிருக்கிறார். 3 படம் நடித்த இவருக்கே இவ்வளவு தன்னம்பிக்கை பேச்சு வருகிறது என்றால் இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கும் தனுஷ் பேச கூடாதா என இப்போது குரல் எழுந்திருக்கிறது.

ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் தனுஷ் போல் நடிக்கிறார், பேசுகிறார் என்ற விமர்சனங்கள் அதிகம் எழுந்தது. இப்போது சரியான சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் அதை கொளுத்தி போட்டு இருக்கிறார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.