நடிகர் விஜய் தனது TVK கட்சியின் இரண்டாம் மாநில மாநாடு மதுரையில் நடந்தது. ரசிகர்களுக்கும் ,அரசியல் விமர்சகர்களுக்கும் மூக்கில் விரல் வைக்கும் விதமாக மாநாடு அமைந்தது.
பேச்சு ஆரம்பித்ததிலிருந்தே பஞ்ச்:
“நம்ம எதிரி யாரு தெரியுமா? நேரடியா சொல்லறேன்.. திமுகவும் BJP-யும் தான்!”
என விஜய் உரக்க சொன்னதும் கூட்டத்தில் கைகள் மேலோங்க, கோஷங்கள் முழங்கின.
இது மட்டும் இல்ல விஜய், “நான் ஒன்றும் மார்க்கெட் இழந்து அரசியலுக்கு வரல… காத்திருந்தேன், நேரம் வந்தது!” அதுக்கு அப்புறம் அரசியலுக்கு வந்தேன் என்று கூறியதும், பலரும் ‘அது ரஜினி-கமலுக்கு தானே?’ என புரிந்துகொண்டனர்.
இதில் “மார்க்கெட் போச்சு” என்பதை குறிப்பிட்டது, ரஜினியின் முழு அரசியல் பயணத்தையும், மற்றும் கமலின் Makkal Needhi Maiam கட்சியின் எதிரொலியில்லாத தேர்தல் முயற்சிகளையும், மரியாதையாக தைரியமாக குறிப்பிட்டுள்ளார் விஜய்.
ஒரு அரசியல் லைன் – பூரண மாற்றத்தின் புனிதம்?
விஜய் இப்போது TVK மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கு களமிறங்க, திமுக மற்றும் BJP ஆகிய இரண்டும் நேரடி எதிரிகள் என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். இதுவரை பரஸ்பரமாகத் தவிர்த்து நடந்துகொண்ட விஜய், இப்போது “நேருக்கு நேர் மோதல் தான் அரசியல்!” என முடிவெடுத்திருக்கிறார்.
ரசிகர்கள் என்ன சொல்றாங்க?
“தளபதி அரசியல் போதும் என நினைத்தோம். இப்போ போருக்கு தயாராகிட்டாரு போல இருக்கு!”. “மார்க்கெட் போச்சுனு சொல்லி, ரஜினிக்கு குடுத்தது ஒரு சரியான பஞ்ச்!”
முடிவாக:
மதுரையில் இருந்து எழுந்த அரசியல் ராக்கெட், தமிழக அரசியலை விட்டு விடாது போலிருக்குது. திமுக, BJP, கமல், ரஜினி என எல்லோரையும் ஒரே மேடையில் Mention செய்யும் விஜயின் இந்தப் பேச்சு, தமிழ்நாட்டையே உலுக்கிவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை.