தெலுங்கில் வெளியாகி, தமிழ் ரசிகர்களுக்காக மொழிபெயர்க்கப்பட்ட வெப் சீரிஸ்கள், சமீபத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. சஸ்பென்ஸ், த்ரில்லர், உணர்ச்சி, விசாரணை என பல விதமான கதைகள் தமிழ் ஓடிடி ரசிகர்களையும் பரவசப்படுத்தியுள்ளன.
Dhootha (தூதா – 2023): நாக சைதன்யா நடித்த தூதா, எதிர்கால நிகழ்வுகளை முன்னே கூறும் செய்தித்தாள்கள் மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகையாளரின் வாழ்க்கையில் ஏற்படும் அதிரடியான மாற்றங்களை காட்சிப்படுத்துகிறது. 2023-இல் Amazon Prime Video-வில் வெளியாகியது.
Gaalivaana (காலிவானா – 2022): கொலை மற்றும் மர்மம் நிறைந்த கதைக்களத்தில் நகரும் காலிவானா, உண்மையைத் தேடும் இரு குடும்பங்களைச் சுற்றி நகர்கிறது. திருப்பங்கள் நிறைந்த இந்த தொடரில், ஒவ்வொரு பாத்திரமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2022-இல் Zee5-இல் வெளியானது.
Devika and Danny ( (தேவிகா அண்ட் டேனி – 2024): போலீசாரான (தேவிகா மற்றும் டேனியின் விசாரணை மற்றும் வாழ்க்கையைச் சுற்றி நகரும் இந்த தொடர், நகைச்சுவை மற்றும் மர்மம் கலந்தது. பெண்கள் மைய கதையாக இது அமைய, புதுமையான அனுபவத்தை தருகிறது. 2024-இல் Disney+ Hotstar-இல் வெளியாகியது.
Kudi Yedamaithe (குடி எதமைதே – 2021): ஒரே நாளை மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளும் போலீஸ் அதிகாரியும், டெலிவரி பாயும் கதையின் மையமாக உள்ளனர். டைம் லூப் கதைக்களத்தில் இந்த தொடர் புதுமையை தந்துள்ளது. 2021-இல் Aha-வில் வெளியானது.
Paruvu (பரவு – 2024): கௌரவக் கொலை என்ற கருப்பொருளில் அமைந்த பருவு தொடரில், தப்பிச் செல்லும் காதல் தம்பதியின் பயணம் சித்தரிக்கப்படுகிறது. சமூக அழுத்தத்துக்கும் காதலுக்கும் இடையிலான போராட்டம் உணர்வூட்டலாக பதிவு செய்யப்படுகிறது. 2024-இல் Zee5-இல் வந்தது.
தெலுங்கு வெப் சீரிஸ்கள் தமிழ் மொழியில் வெளியாகி, உள்ளடக்க தரம், கதையமைப்பு, நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்துள்ளன. தமிழ் ஓடிடி ரசிகர்களும் இப்போது புதிய வகைத் தொடர்களை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த தரமான தொடர்களை நீங்கள் தவற விடக்கூடாது.