இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்கிறார் எஸ்.எஸ். ராஜமௌலி. அதிரடியும், உணர்வும் கலந்த கதை சொல்லலின் வழியாகவே அவர் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் உருவான 4 முக்கிய தெலுங்கு திரைப்படங்கள் தமிழில் வெவ்வேறு பெயர்களில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன அவற்றை பார்க்கலாம்.
மரியாதா ரமண்ணா (Maryada Ramanna): வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்: 2010-ஆம் ஆண்டு வெளியான மரியாதா ரமண்ணா (Maryada Ramanna) திரைப்படத்தை எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கினார். இது 1923-ஆம் ஆண்டு வெளியான பஸ்டர் கீட்டனின் Our Hospitality என்ற மெளன திரைப்படத்தில் இருந்து ஈர்க்கப்பட்டது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (2014) – இதில் சந்தானமும், அஷ்னா ஜவேரியும் நடித்திருந்தனர்.
விக்ரமார்க்குடு (Vikramarkudu) – சிறுத்தை: 2006-ல் வெளியான தெலுங்கு ஹிட் படம் விக்ரமார்க்குடு (Vikramarkudu), ராஜமௌலி இயக்கிய ஒரு சக்திவாய்ந்த மாஸ் மசாலா திரைப்படம். இதனைத் தமிழில் சிறுத்தை என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இதில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
ஸ்டூடண்ட் நம்பர் 1 (Student No. 1) – ஸ்டூடண்ட் நம்பர் 1 : ராஜமௌலி இயக்கிய முதல் வெற்றி திரைப்படங்களில் ஒன்று ஸ்டூடன்ட் நம்பர் 1 (Student No. 1) (2001), இதில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்தார். இந்த திரைப்படம் தமிழில் ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இதனை இயக்கியவர் செல்வா, கதாநாயகனாக நடித்தவர் சிபிராஜ்.
சிம்ஹாத்ரி (Simhadri) – கஜேந்திரா: 2003-ல் வெளிவந்த சிம்ஹாத்ரி (Simhadri) என்ற தெலுங்கு ஹிட் திரைப்படத்தை ராஜமௌலி இயக்கினார். இது விஜயகாந்த் நடித்த கஜேந்திரா (2004) என்ற தமிழ் படமாக வந்தது. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனினும், இது ராஜமௌலி படத்தின் ரீமேக் ஆகும்.
எஸ்.எஸ். ராஜமௌலியின் 5 முக்கிய திரைப்படங்கள் தமிழில் ரீமேக் அல்லது டப்பிங் செய்யப்பட்டுள்ளன. இது அவரது கதைகளின் வீரியம் மற்றும் பொது ரசிகர்களை கவரும் திறனை உறுதிப்படுத்துகிறது