தமிழ் சினிமா, ஒரு காலத்தில் இந்தியாவின் கலை, தொழில்நுட்ப சிறப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய உன்னத துறையாக இருந்தது. ஆனால் இன்று, சமூக வலைதளங்கள் வழியாக திட்டமிட்டு, ஒருங்கிணைத்து நடைபெறும் எதிர்மறை (negativity) பிரச்சாரங்கள், இந்தத் துறையை மெதுவாக நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கின்றன.
பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் நேரத்தில், குறிப்பிட்ட சில பிரிவுகள் ஒரே மாதிரியான விமர்சனங்களை, meme-களை, தவறான தகவல்களை பரப்பி, பொதுமக்களின் மனதில் குழப்பத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்துகிறார்கள். இது சாதாரண ரசிகர் விவாதமல்ல , இது ஒரு திட்டமிடப்பட்ட ‘propaganda’ நடவடிக்கை.
ரஜினிகாந்த் போன்றவர்களின் மிகப்பெரிய fan base கூட 30% வரை இந்த விளைவுகளைத் தவிர்க்க முடியாமல் இருக்கின்றனர். பிற நட்சத்திரங்கள் மற்றும் நடுத்தர தயாரிப்பாளர்களுக்கு இதுவே வேரறுக்கும் அளவுக்கு ஆபத்தாக இருக்கிறது.
இதன் விளைவாக, பாக்ஸ் ஆபிஸ் வசூல், திரையரங்குகளின் செல்வாக்கு, சினிமா தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் எதிர்காலம் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டது. வட அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழ் ரசிகர்கள், தற்போது நேரடியாக தெலுங்கு படங்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். காரணம், தமிழ் சினிமாவிற்கு எதிரான இவ்வகை பிரச்சாரங்கள் தான், அதன் மதிப்பையும், மார்க்கெட்டையும் பாதித்துவிட்டன.
சன்பிக்சர்ஸ் மற்றும் மற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், இப்படிப்பட்ட எதிர்மறை சக்திகளுக்கு எந்த விதமான விளக்கமும் கொடுக்காமல், தரமான படங்களை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
இந்த சுத்தமற்ற சூழலை மாற்ற முடியும் அதிகாரம் நம்மிடம் தான் இருக்கிறது. ரசிகர்கள், வணிகர்கள், ஊடகங்கள், தொழிலாளர்கள் என அனைவரும் உண்மையாக திரைதுறைக்காக ஒன்று கூட வேண்டிய நேரம் இது.