தம்பிகளுக்காக கல்யாணம் வேண்டாம் என்று சொல்லும் சேரன்.. பாசத்தை பார்த்து பூரித்து போன நிலா – Cinemapettai

Tamil Cinema News

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரனுக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று நிலா அதிகமாக மெனக்கெடு செய்து வருகிறார். இதற்காக ஒரு சில வரங்களை பார்த்தும் அது எதுவும் சரி வராமல் போய்விட்டது. அதன் பின் சேரனை மனதார காதலிக்கும் கார்த்திகாவை வைத்தும் முயற்சி பண்ணிப் பார்த்தார்.

அதுவும் கார்த்திகாவின் அம்மா மூலம் நடக்காமல் போய்விட்டது. இதனால் நிலா, மனம் தளராமல் அடுத்து பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். அந்த சமயத்தில் ஏற்கனவே சேரனை பார்த்து எல்லாம் ஓகே என்று சொன்ன குடும்பம் சேரனை பார்த்து பேசுவதற்காக வீட்டிற்கு வருகிறார்கள்.

அப்படி வந்த பொழுது சேரன் வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் பொண்ணு சொன்னது என்னவென்றால் எனக்கு சேரனை கல்யாணம் பண்ண டபுள் ஓகே. ஆனால் அவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என்று கண்டிஷன் போட்டார். இந்த கண்டிஷன் போட்டதற்கு சேரனின் தம்பிகளும் அண்ணன் சந்தோசமாக இருந்தால் அது போதும் என்ற நினைப்பில் பெண் வீட்டார்கள் இடம் ஓகே என்று சொல்லிவிடுகிறார்கள்.

பிறகு வீட்டுக்கு வந்த சேரனிடம் உனக்கு முதலில் பார்த்த பெண் ஓகே சொல்லிவிட்டது என சொல்கிறார்கள். இதில் சந்தேகப்பட்ட சேரன் அந்தப் பெண்ணை தனியாக சந்தித்து கேள்வி கேட்கிறார். எப்படி என்னை கல்யாணம் பண்ணுவதற்கு இப்பொழுது சம்மதம் சொன்னீங்க என்று கேட்கிறார். அதற்கு உங்கள் தம்பிகள் கல்யாணத்துக்கு பிறகு தனிக்குடித்தனம் போகலாம் என்று சொல்லிவிட்டதாக சொன்னார்கள்.

உங்களுக்கும் அதில் சம்மதம் என்று சொன்னதனால் எனக்கும் கல்யாணம் ஓகே என்று சொல்லிவிட்டதாக அந்த பொண்ணு சொல்கிறது. இதை கேட்டு அதிர்ச்சியான சேரன் நேரடியாக வீட்டிற்கு போகிறார். போனதும் எனக்கு உங்களை விட கல்யாணம் தான் முக்கியம் என்று நினைத்து விட்டீர்களா. எப்பொழுதுமே என்னுடைய குடும்பம் தம்பிகள் தான் என்ற சந்தோஷத்தில் நான் இருக்கிறேன்.

எனக்கு இதுவே போதும் என்று பாசமாக பேசி தம்பிகளுடன் பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். இந்த செண்டிமெண்ட் ஆன பாசத்தை பார்த்து நிலாவும் பூரித்து போய்விட்டார். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக சோழன் மீதும் நிலாவுக்கு தெரியாமல் காதல் வந்து கொண்டிருக்கிறது. அதனால் நிச்சயம் சோழனை விட்டும் குடும்பத்தை விட்டும் நிலா வெளியே போகவே மாட்டார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.