Ajith : அனைவராலும் தல என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித். அவர் பெயருக்கு ஏற்றவாறு பிறருக்கு உதவுவதில் கூட தாராள மனப்பான்மை கொண்டவர். தான் உதவுவது கூட பிறருக்கு தெரியக்கூடாது என நினைப்பவர்.
சினிமாவில் கூட இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தற்போது ரேஸிங் மற்றும் சினிமாத்துறையில் பிசியாக இருந்து வருகிறார். தற்போது அஜித்தை பற்றிய ஏகப்பட்ட அப்டேட் வந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
தற்போது இவர் “AK64” மற்றும் “AK65” படத்திற்கான அப்டேட் கொடுத்துள்ளார். தற்போது இவர் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதாவது “AK 64” படத்தை அஜித் அவர்கள் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து எடுக்க உள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வந்துள்ளன. தற்போது இந்த படத்தை அஜித் அவராலே தயாரிக்க உள்ளதாக செய்யாறு பாலு அவர்கள் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த அஜித்..
ஒரு வேலை அதிக பட்ஜெட் படம் என்பதால் தயரிப்பாளர்கள் மறுத்துவிட்டனர் என்ற கேள்வி எழுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 275 கோடியும், இதில் அஜித்குமார் 180 கோடி சம்பளம் பெறவுள்ளதாகவும். ஆதிக் ரவிச்சந்திரன் 12 கோடி சம்பளம் பெறவுள்ளதாகவும் தகல்வல்கள் கசிந்துள்ளன.
அஜித்துடைய தற்போது வழியான படம் எதிர்பார்த்த அளவுக்கு லாபத்தை ஈட்டி தரவில்லையாம். அதனால் இந்த படத்தில் பெரிய தயாரிப்பாளர்கள் சற்று பின்வாங்குகிறார்களாம்.
பட்ஜெட் அதிகம், சம்பளமும் அதிகம் என்பதால் தயாரிப்பாளர்கள் இந்த படத்தை தவிர்த்து விட்டனர் என்றும், படத்தின் கதை நன்றாக இருப்பதால் அஜித் அவர்களே இந்த படத்தை தயாரிக்க போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தின் மூலம் நடிகர் அஜித் தயாரிப்பாளர் அஜித்தாக அவதாரம் எடுக்க உள்ளார் எனவும் பேசப்படுகின்றன. இதை பற்றிய அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் . அனைத்திலும் சாதிக்கும் அஜித் தயரிப்பாளராகவும் சாதிப்பாரா?பொறுத்திருந்து பார்க்கலாம்.