Vijay : சினிமா வரலாற்றிலேயே விஜய் போல ஒரு சரித்திரம் எழுதும் நாயகன் யாரும் இல்லை என்பது போல தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு சரித்திரத்தை எழுதியிருக்கிறார் விஜய்.
இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்ற பேச்சுடன் தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் தனது அப்பாவின் வழிகாட்டுதலில் நடித்து வந்தார்.
1997 இல் காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றார் தளபதி. அதன்பின் பிரியமானவளே திரைப்படத்தில் சிம்ரனுடன் இணைந்து மேலும் தமிழ்நாட்டு மக்களின் மனதில் கால் பதித்தார்.
இப்படி ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது திறமையும், ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்த விஜய், இன்று யாரும் அசைக்க முடியாத சினிமாவின் ஸ்டாராகவும், அரசியலில் களம் இறங்கிய அரசியல்வாதியாகவும் திகழ்கிறார்.
விஜயின் சீக்ரெட்..
எடுத்ததும் எந்த மனிதனும் உச்சத்தை தொட முடியாது. அந்த வேலையில் அவனுக்கு இருக்கும் ஆர்வமும், கடுமையான உழைப்பும் தான் அவனை முன்னேற்றும் அந்த வகையில் தன் முயற்சியால் மட்டும்தான் விஜய்க்கு வெற்றி சாத்தியமானது.
ஒரு படத்தில் கமிட்டானால் இந்த நேரத்தில் நான் படத்தை முடித்துக் கொடுப்பேன் என்று வாக்களித்தால் அதை அப்படியே முடிப்பாராம் விஜய். குறைந்தது ஒரு படத்திற்கு 120 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்வார்.
தெலுங்கில் புகழாரம்..
” விஜய் மாதிரி ஒரு படத்திற்கு 120 நாட்கள் மட்டுமே எடுத்து அந்த டைமிங்கில் மற்ற நடிகர்களும் படத்தை முடித்தால் நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை கொடுக்கும். ஆனால் அந்த மாதிரி யாரும் இல்லை- தெலுங்கு பட இயக்குனர்”.