TVK-Vijay: தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் தற்போது கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட விஜய் தலைமையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மீண்டும் அவர் குரல் கொடுத்துள்ளார். பரந்தூரில் ஏர்போர்ட் வரக்கூடாது என்று விவசாய மக்கள் வருட கணக்கில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் நான் அவர்களை சந்தித்த மறுநாளே அது குறித்து விளக்க அறிக்கை கொடுக்கப்பட்டது. அதில் அங்கு வசிக்கும் மக்களுக்கு விமான நிலையத்தால் பாதிப்பு ஏற்படாது என்று சொல்லப்பட்டிருந்தது.
முதல்வருக்கு சவால் விட்ட TVK தலைவர்
பல மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு அந்த இடத்தில் தான் ஏர்போர்ட் வரணும்னு என்ன அவசியம். இதையெல்லாம் செய்துவிட்டு எப்படி மக்களின் முதல்வர் அப்படின்னு நா கூசாம சொல்றீங்க.
எதிர்க்கட்சியாய் இருக்கும் போது ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சு. பரந்தூர் மக்களை இதுவரை நீங்கள் சந்திக்கவில்லை. ஏனென்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. அப்படி அந்த மக்களை நீங்கள் சந்திக்கவில்லை என்றால் நானே அவர்களை அழைத்து வந்து உங்களை நேரில் சந்திப்பேன் என முதல்வருக்கு விஜய் சவால் விடுத்துள்ளார்.
அவருடைய இந்த அனல் பறக்கும் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் ஆளும் கட்சி இதற்கு என்ன பதில் கொடுக்கப் போகிறது என்ற ஆவலும் ஒரு பக்கம் இருக்கிறது.