Rajinikanth: சூப்பர் ஸ்டார் லோகேஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா, சத்யராஜ் என ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இது தவிர யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் இருக்கிறது. அதேபோல் இந்த மாதம் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பே ஒவ்வொரு அப்டேட்டாக வந்து கொண்டிருக்கிறது.
ரசிகர்கள் அதை கொண்டாடும் நிலையில் தலைவர் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அதேபோல் அடுத்த படத்திற்காகவும் அவர் கதை கேட்டு வருகிறார். அதில் இரண்டு இயக்குனர்கள் இந்த லிஸ்டில் இருக்கின்றனர்.
ரஜினியின் சாய்ஸ் யாரா இருக்கும்
அதன்படி ஜனநாயகன் படத்தை இயக்கி வரும் எச் வினோத் தலைவருக்காக ஒரு கதையை கூறியிருக்கிறார். அது ரஜினிக்கு ரொம்பவும் பிடித்து போய்விட்டதாம். அதேபோல் தெலுங்கு பிரபல இயக்குனர் விவேக் ஆத்ரேயா கூட சூப்பர் ஸ்டாரை இயக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அவருடன் கூட ஒரு பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. இரண்டு பேர் சொன்ன கதை தலைவருக்கு பிடித்துள்ளது. இதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுப்பதில் தான் சிக்கல் இருக்கும்.
ஆனால் எச் வினோத்துக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர். எது எப்படியோ யார் படத்தில் நடிக்க வேண்டும் என்பதை ரஜினி தான் முடிவு செய்ய வேண்டும். பார்க்கலாம் தலைவரின் சாய்ஸ் யார் என்று.