Vijay : நடிகர் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்து சில மாதங்களாக தனது செயலை அருமையாக செய்து வருகிறார் என்று அனைவராலும் பாராட்டப்பட விஜய். திரும்ப திரும்ப தொடர்ந்து சில தவறுகளையும் செய்து வருகிறார்.
ஆமாம் கட்சி ஆலோசனை கூட்டத்தில் நடந்த பதவி சிக்கல்கள், மக்கள் விரும்பும் முதலமைச்சர் ஸ்டிஸ்க்கெரில் புஸ்ஸி ஆனந்த் புகைப்படம், இதனால் அடுத்தடுத்து உங்கள் கட்சியின் பெயரை நீங்களே கெடுத்துக்கொள்கிறீர்கள் என அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுகின்றனவாம்.
தலை தப்புமா TVK..
அதுமட்டுமல்லாமல் தற்போது உறுப்பினர் சேர்க்கை செய்யும் app ஒன்றை அறிமுகம் செய்து அந்த செயலில் சிறிது பிரச்சனை இதையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள் எதிர்ப்பாளர்கள். சிறு தவறை சுட்டிகாட்டி ஒட்டுமொத்த அரசியலையும் காலி செய்ய பார்க்கிறர்கள் எதிர்ப்பாளர்கள்.
அதுமட்டுமல்லாம் தற்போது விஜய் அவர்கள் பேசிருக்கையில், தேர்தலில் மிக முக்கியமான தேர்தல் என்றால் 1967 மற்றும் 1977 நடந்த தேர்தல் தான், அதற்கு பிறகு 2026 தேர்தல் தான் சாதனை செய்ய போகிறது என்று பேசியிருக்கிறார்.
புதிதாக முயற்சி செய்தவற்கு கைகொடுத்த தேர்தல் இப்பொது இவருக்கும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு இவர் பேசிக்கொண்டிருக்கிறார். எல்லாம் நல்ல விஷயம்தான் ஆனால் பேசிக்கிட்டே இருக்கீங்களே தவிர செயலில் ஒன்றையும் காணும் என கலாய்த்து வருகிறர்கள் எதிர்ப்பாளர்கள்.
இன்னும் எந்த மீடியாவிற்கும் நேர்காணல் அளிக்கவில்லை விஜய், மக்களை நேரிடையாக சந்திக்கவில்லை, தற்போது செயலில் பிரச்சினை என தொடர்ந்து சொதப்பி வரும் விஜய். மதுரை மாநாட்டை மட்டும்தான் தூண் போல் நம்பியுள்ளார். இதுவும் சொதப்பியது என்றல் கூடாரத்தை காலி செய்ய வேண்டியதுதான் என்று எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றார்களாம்.
ஒரு மனிதன் எவ்வளவு நல்லது செய்திருந்தாலும் அதெயெல்லாம் இந்த உலகம் பார்க்காது. நீங்கள் செய்த சிறு தவறை வைத்து இந்த உலகம் உங்களை எடை போடும் என்பதை மறவாதீர்ககள். வளர்ந்து வரும் கட்சி என்பதால் கூடுதல் பொறுப்போடு செயல்படுமாறு மக்கள் கூறுகின்றார்களாம்.