தளபதிக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. திரிஷா வெளியிட்ட போட்டோவால் குஷியான ஹேட்டர்ஸ் – Cinemapettai

Tamil Cinema News

Vijay-Trisha: நேற்று விஜய் தன்னுடைய 51வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தளபதிக்கு ஸ்பெஷல் வாழ்த்து திரிஷா வெளியிட்ட போட்டோவால் குஷியான ஹேட்டர்ஸ் Cinemapettai.webp

அதேபோல் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் வீடியோ முதல் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்கள் என அனைத்தும் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் விஜய் எதிர்பாளர்கள் எதிர்பார்த்த விஷயமே வேறு.

கடந்த சில வருடங்களாகவே விஜய் திரிஷாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அவ்வப்போது சில போட்டோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தளபதிக்கு ஸ்பெஷல் வாழ்த்து

அதற்கேற்றார் போல் விஜய்யின் மனைவி சங்கீதா பொதுவெளியில் அதிகம் தென்படுவது கிடையாது. அதிலும் தளபதியுடன் அவரை சேர்த்து பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது.

எல்லாமே திரிஷாவால் தான் என ஒரு குரூப் கிளம்பிவிட்டது. அதேபோல் கடந்த வருட பிறந்த நாளின் போது கூட த்ரிஷா விஜய்யுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ஒரு பரபரப்பைக் காட்டினார்.

அதனால் இந்த பிறந்த நாளுக்கும் ஏதாவது கன்டென்ட் கிடைக்கும் என விஜய் எதிர்பாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதற்கேற்றார் போல் தலைவி பிறந்தநாள் முடியும் சில மணி நேரங்களுக்கு முன் விஜய் உடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் திரிஷாவின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் விஜய் நாய்க்குட்டியை தூக்கி கொஞ்சுகிறார். இந்த போட்டோவை பார்த்த அனைவரும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.

இருக்கிற பஞ்சாயத்து போதாதுன்னு இந்த மாமி வேற என கமெண்ட் போட்டு வருகின்றனர். அதேபோல் விஜய் ஹேட்டர்ஸ் ஓடியாங்க திரிஷா போட்டோ போட்டு இருக்கு இன்னைக்கு கன்டென்ட் இதுதான் என டிவீட் போட்டு வருகின்றனர்.

ஆக மொத்தம் எரியுற நெருப்பில் பெட்ரோல் ஊற்றிய கதையாக இருக்கிறது திரிஷா வெளியிட்ட போட்டோ. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் விஜய் தன் குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை வெளியிட வேண்டும் என அவருடைய ரசிகர்களும் தொண்டர்களும் கூறி வருகின்றனர்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.