Vijay: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தன்னுடைய கட்சியின் இரண்டாவது மாநாட்டிற்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி தேர்வு செய்திருக்கிறார். ஆகஸ்ட் 25 அவருடைய திருமண நாள் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் என்பதாலேயே தமிழ்நாட்டில் எதற்காக இந்த தேதி என்று மிகப்பெரிய பட்டிமன்றமே நடந்தது.
தற்போது இந்த கேள்விக்கு தெளிவான விடை கிடைத்திருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லாத கட்சியை நாங்கள் கூட்டணிக்கு வரவேற்கிறோம். மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கிறோம். இதுதான் தமிழக வெற்றி கழகத்தில் தாரக மந்திரம்.
பிரம்மாண்ட கூட்டணி!
இதை ஏற்று பெரிய கட்சி ஒன்று மதுரை மாநாட்டில் விஜய்யுடன் கைகோர்க்க இருக்கிறது. கேப்டன் விஜயகாந்த் அவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் தான் அந்த கட்சி.
கால சூழ்நிலைகள் சாதகமாக இருந்திருந்தால் 2016 ஆம் காலகட்டத்திலேயே இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் முதலமைச்சர் ஆக கூட ஆகியிருப்பார்.
ஒரு சில காரணங்களால் இந்த கட்சி பலருடன் கூட்டணி வைத்து ஏமாற்றத்தையே சந்தித்தது. தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை விஜய் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் அதிமுக கட்சி ராஜ்யசபா சீட்டு தருவதாக சொல்லி தேமுதிக கட்சியை காலை வாரி விட்டுவிட்டது. விஜயகாந்தின் கொள்கையை கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என்பதால் கண்டிப்பாக திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்காது.
தமிழக வெற்றி கழகத்துடன் தேமுதிக இணைந்து பணியாற்ற இருக்கிறது. இந்த கூட்டணி அறிவிப்பு கேப்டனின் பிறந்தநாள் அன்று வெளியாக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும்.
அதனால் தான் இந்த மதுரை மாநாட்டை கேப்டன் பிறந்தநாள் அன்று தொடங்குகிறார்கள். இந்த மேடையில் விஜய் மற்றும் பிரேமலதா ஒன்றாக இணைந்து கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார்கள்.