Star Tamil chat Star Tamil Chat

தளபதி படத்தின் இந்த ஒன்லைன் தான் கூலி பட கதை.. லோகேஷால் மட்டும் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும்! – Cinemapettai

Tamil Cinema News

Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும், அதுவாகத்தான் இருக்கும் என எக்கச்சக்க கதைகள் வெளியாகிவிட்டது.

இந்த நிலையில் தான் கூலி படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் தளபதி ரஜினியை பார்ப்பது போலவே இருக்கிறது என்று சொன்னதாக லோகேஷ் சொல்லியிருந்தார். இது மட்டும் இல்லாமல் தற்போது கூலி படத்தின் உண்மை கதை எது என்ன என்றும் தெரிந்திருக்கிறது.

கூலி பட கதை

தளபதி படத்திலிருந்து ஒன் லைன் ஸ்டோரி ஒன்றை எடுத்து இரண்டரை மணி நேர படமாக ஆகி இருக்கிறார் லோகேஷ். தளபதியில் தேவாவிடம் சூர்யா சேர்ந்த பிறகு பானுப்பிரியாவின் கணவரை அவர் கர்ப்பமாக இருக்கும்போதே கொன்றுவிடுவார்.

பின்னர் சோபனாவின் திருமணம் முடிந்த கையோடு தேவா 5 வயது குழந்தையுடன் இருக்கும் பானுப்ரியாவை சூர்யாவுக்கு திருமணம் செய்து வைப்பார். சூர்யாவும் அந்த குழந்தை மீது அளவு கடந்த பாசத்தை காட்டுவது போல் படத்தில் காட்டப்பட்டிருக்கும்.

இந்த குழந்தை வளர்ந்த பிறகு தன்னுடைய வளர்ப்பு தந்தை சூர்யா தான் தன் தந்தையை கொன்றது என்ற விஷயம் தெரிந்து பழி வாங்கினால் எப்படி இருக்கும். இதுதான் கூலி படத்தின் கதை. அந்த குழந்தையாக தான் சுருதிஹாசன் நடிக்கிறார்.

கிட்டத்தட்ட நாயகன் படத்தில் அந்த போலீஸ்காரரின் மகனை கமலஹாசன் வளர்ப்பார். கடைசியில் தன்னுடைய அப்பாவின் மரணத்திற்கு கமல் தான் காரணம் என்று தெரிந்து கமலை போட்டு தள்ளி விடுவார். அந்த ரெஃபரன்ஸை அப்படியே எடுத்து கூலி படத்தை எடுத்து விட்டார் போல லோகேஷ்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.