Memes: திருப்புவனம் இளைஞர் மரணம் ஒட்டு மொத்த தமிழக மக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. அதிகாரம் கையில் இருந்தால் அப்பாவிகளை எப்படி வேண்டுமானாலும் கொடுமைப்படுத்துவீர்களா என நியாயக் குரல்கள் எழுந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். இது ஒரு பக்கம் இருக்க ஆளும் கட்சியை எதிர்த்து தமிழ் சினிமா நடிகர்கள் யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை என்பதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.

கடந்த ஆட்சியில் இவர்கள் எல்லாம் நிஜ வாழ்க்கையில் ஹீரோக்கள் போல பேசியதை யாரும் மறக்கவில்லை. ஆனால் இப்போது உங்கள் வாயில என்ன கொழுக்கட்டையா என பொதுமக்கள் ஆவேசத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர்.

சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் சூர்யா, சத்யராஜ், சித்தார்த், பிரகாஷ்ராஜ் என அனைவரையும் இணையவாசிகள் கிழித்து தொங்க விட்டனர். இந்த சூழலில் தற்போது சத்யராஜ் ஆளும் கட்சியை பாராட்டி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்து கொதித்துப் போன நெட்டிசன்ஸ் அஜித் குமார் செத்துப் போனதுக்கு நியாயம் கேட்க முடியல. இப்ப பாராட்ட வந்துட்டீங்களா என அவரை கிழி கிழி என கிழிக்கின்றனர்.

அதேபோல் ஆளும் கட்சி தப்பு செய்தால் ஊமை ஆகி விடுவது. இல்லை என்றால் கண்டதையும் பாராட்ட வேண்டியது கேட்டால் புரட்சித்தமிழர் என பீற்றி கொள்வது. இப்பதான் கோமாவில் இருந்து முழிச்சிங்களா என சத்யராஜை கலாய்த்து வருகின்றனர்.

இப்படியே சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.