TVK Vijay: தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்யும் அட்ராசிட்டிகள் வர வர அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஒரு காமெடியில் வடிவேலு கொடுத்த காசுக்கு மேல கூவுறான்யா என்று சொல்வார்.
அதை அப்படியே ஃபாலோ பண்ணும் புஸ்ஸி ஆனந்த் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ட்ரோல் மெட்டீரியல் ஆகி வருகிறார். விஜய்யை டாமினேட் செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இவருக்கு அதிக செல்வாக்கு இருப்பது போல் தொடர்ந்து காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
வம்பு பண்ணும் புஸ்ஸி ஆனந்த்
போதாத குறைக்கு திடீரென கோபப்பட்டு மரியாதை இல்லாமல் பேசுகிறார், நடந்து கொள்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் மேடை ஏறினாலே விஜய்க்கு ஓவர் பில்டப் கொடுத்து முகம் சுளிக்கும் அளவுக்கு பேசுகிறார்.
சமீபத்தில் நடந்த மீட்டிங் ஒன்றில் தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளர் JV என்று சொல்கிறார். கூட்டத்திலிருந்து அத்தனை பேரும் இவர் யாரை சொல்கிறார் என்று தெரியாமல் மிரண்டு போகிறார்கள். மீண்டும் முதல்வர் வேட்பாளர் JV தளபதி என்று சொல்கிறார்.
விஜய் என்ற ஒரு பெயர் தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளம். இன்று அத்தனை தமிழக மக்களும் தாரக மந்திரமாக கூட அந்தப் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென JV என்ற பிராண்டை கொண்டு வருவது சகிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை எம்கே ஸ்டாலின் என்று சொல்வது போல் இவர் ஜோசப் விஜய் என்பதை தான் JV என்று உருவாக்க முயற்சி செய்கிறார். ஆனால் தமிழக மக்களிடம் இது செல்லுபடி ஆகாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.