Cinema : தற்போது சினிமா நடிகர் ஸ்ரீகாந்த் போ**தை பொருள் வழக்கில் கைதாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில் மேலும் முக்கிய நடிகர்கள், இந்த விசாரணையில் சிக்கியுள்ளார்.
முக்கியம் விவரங்கள்
ஸ்ரீகாந்த் வீட்டில் 1 கிராம் போ**தைப்பொருள்கள் மற்றும் ஏழு வெற்று பாக்கெட் கைப்பற்றப்பட்டன. இதனை அடுத்து போலீஸ் விசாரணையில் 40 முறையில் கிட்டத்தட்ட 4. 72 லட்சம் இதற்காக செலவு செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
அதிமுக முக்கிய பிரமுகர் பிரஷாந்த் தான் இந்த பழக்கத்தை ஸ்ரீகாந்துக்கு பழக்கியதாகவும் ஒரு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். பிரசாத் மற்றும் அவனது குழு, சரக்கு போதைத் தொடர் செயல்களில் ஈடுபட்டுள்ளதுடன், அரசாங்க வேலை வஞ்சனை, நில ஊழல், கருவூலம் மோசடி போன்ற குற்றங்களிலும் பங்குபெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர் .
விசாரணை வளையத்தில் முக்கிய நடிகர்..
மேலும் ஒரு முக்கிய நடிகரான கிருஷ்ணாவும் இந்த போ**தை பொருள் உபயோகிக்கிறார் என்று சந்தேகம் எழுந்துள்ளது. திடீர்னு கிருஷ்ணாவும் தலைமறைவாகவே, போலீஸ் தீவிர தேடல் வேட்டையில் ஈடுபட்டு, கேரளாவில் கிருஷ்ணாவை மடக்கி பிடித்தனர்.
திடீரென ஏற்பட்ட நோய்..
இந்நிலையில் கிருஷ்ணா கூறியது போலீசுக்கே அதிர்ச்சி அளித்துள்ளது.
” எனக்கு கொஞ்ச நாளாகவே இரைப்பை அலர்ஜி இருக்கிறது. இதன் காரணமாக என்னால் போ**தை பொருள் உபயோகிக்க முடியாது. அதற்கு வாய்ப்பும் இல்லை. இதயத்துடிப்பு சற்று வேகமாக இருப்பதால் அதற்கான சிகிச்சையும் எடுத்து வருகிறேன். ஸ்ரீகாந்த் மட்டும்தான் என்னுடைய நண்பர் எனக்கும் பிரதீப் குமாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை-கிருஷ்ணா” என்று இவர் கூறிய அனைத்தும் தற்போது போலீசாரை குழம்ப செய்துள்ளது.