Aishwarya rajesh : 2011 இல் அவர்களும் இவர்களும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய தமிழ் நடிகை ஐஸ்வர்யா.
காக்கா முட்டை, பண்ணையாரும் பத்மினியும், வடசென்னை, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தமிழ் நடிகை.
கதை தேர்வில் மிகவும் பக்குவம் வாய்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்த வருகிறார்.
இந்த வருடம் முதல் மாதம் ஜனவரியில் “சங்கராந்திகி வஸ்துன்னம்” என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். படம் வெளியாகி பயங்கர ஹிட்டை கொடுத்தது. இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பார். இந்தப் படம் 300 கோடி வசூல் செய்து அபார வெற்றி கொடுத்தது.
இந்தப் படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, தெலுங்கு ரசிகர்களும் அதிகமாகிவிட்டனர்.
4 குழந்தைகளுக்கு தாய்..
சங்கராந்திகி வஸ்துன்னம் திரைப்படத்தில் நான் நான்கு குழந்தைகளுக்கு தாயாக நடித்ததில் தயக்கம் கொள்ளவில்லை. சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தின் பாகம் 2 எடுத்தாலும், ஆறு குழந்தைகளுக்கு கூட தாயாக நடித்த தயாராக இருக்கிறேன். ஒரு நடிகை என்றால் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பண்ண வேண்டும் அதுதான் ஒரு சிறந்த நடிகைக்கு அழகு- ஐஸ்வர்யா ராஜேஷ்