Cinema : தற்போது சினிமா உலகம் மாறி கொண்டே போகிறது. ஆதிகாலத்தில் கம்மி விலைக்கு விட்டு டிக்கெட் தற்போது விலையேற்றப்பட்டு இருக்கிறது. உணவுக்கு பஞ்சம் என்றாலும் தியேட்டருக்கு வரும் இந்த மக்கள் கூட்டம் குறையவில்லை.
ட்ரைலர் பார்க்க புது ரூல்ஸ்..
வழக்கமாக ஒரு புது திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பு யூட்யூபில் அந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்படும். அதுவும் மக்கள் பார்க்கும் வகையில் இலவசமாக தான் இருக்கும். இதே போல் தியேட்டரில் ஒரு படம் திரையிடப்படும் போது விளம்பரங்களின் இடையில் காண்பிக்கப் படுவது வழக்கம்.
இந்நிலையில் ஒரு டீசருக்காகவே தனி ஷோ ஸ்கிரீன் ஒதுக்கி, ₹57 போன்ற கட்டணத்தில் பார்வையாளர்களை அழைப்பது ஒரு மார்க்கெட்டிங் டிரெண்ட் ஆக உருவாகி இருக்கிறது. தற்போது இதை கேட்ட மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
இது படத்தின் முக்கியத்துவத்தை எடுத்து காட்டும் வகையில் இருக்கிறது. ஒரு டீசரை போனில் யூடுயூபில் பார்ப்பதை விட பெரிய திரையில் பார்ப்பது புது அனுபவம் என நினைத்து தற்போது ட்ரெண்ட் செய்துள்ளார்கள்.
சூர்யா படம்..
கோயம்பேடில் உள்ள ரோகினி தியேட்டரில் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. டீசர் கட்டணம் 57 ரூபாய் ஆகும். டீசருக்கே தனி ஷோ என்றால் திரைப்படம் எப்படி இருக்கும்? என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இது சட்டப்படி நடக்கிறது என்பது தெரியவில்லை. வருங்காலத்தில் அனைத்து படங்களுக்கும் இது தொடருமா என்று தெரியவில்லை. ஒரு டீசருக்கே ₹57 என்பது கொஞ்சம் ஓவர் தான். இந்த மாதிரி ரூல்ஸ் வந்தால் எப்படி மக்கள் தியேட்டருக்கு போவாங்க.