Memes: சென்னைக்கு அடையாளமே கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் தான். இங்கிருந்து வெளியூர் செல்வதற்கும் வெளியூர் மக்கள் சென்னைக்கு வருவதற்கும் ஏற்ற இடம் ஆக அது இருந்தது.

ஆனால் இப்போது கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் கிளாம்பாக்கத்திற்கு மாறிவிட்டது. சகல வசதிகளுடன் கூடிய அந்த பஸ் ஸ்டாண்ட் சிறப்பாக தான் இருக்கிறது.

ஆனால் பயணிகளுக்கு தான் அது பெரும் சிரமமாக இருக்கிறது. வெளியூர் போறதுக்கு பஸ் ஸ்டாண்ட் போலாம்னு பார்த்தா பஸ் ஸ்டாண்ட் போறதே வெளியூர் பயணம் மாதிரில்ல இருக்கு என நொந்து போகின்றனர்.

இது இப்படி இருக்க தற்போது திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பஞ்சப்பூர் பக்கம் சென்று விட்டது. அங்கு ஏர்போர்ட்டுக்கு நிகரான வசதிகளோடு வடிவமைத்து விட்டோம் என ஆளும் கட்சி பெருமையோடு சொல்கிறது.

அது உண்மைதான் என்றாலும் மக்களுக்கு சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதைப்போல் அங்கு கடை வைத்திருந்தவர்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது என புலம்புகின்றனர்.

இது பற்றிய மீம்ஸ் தற்போது வைரலாகி வருகிறது திருச்சி பஸ் ஸ்டாண்ட் பக்கத்து ஊருக்கு மாத்திட்டாங்க. எங்களுக்கு பக்கத்து மாவட்டத்திலேயே மாத்திட்டாங்க இது பரவால்ல.

ஓஹோ இவங்க தான் வெளியூர் ஆட்டக்காரர்களா? என பல மீம்ஸ் டிரெண்டிங்கில் இருக்கிறது. இப்படி சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் ட்ரோல் மீம்ஸ் இதோ.
