Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி கல்யாண ரகசியத்தை சொல்லி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் சக்திவேல் பிடிவாதமாக பாண்டியன் குடும்பத்தையும் கதிரையும் அவமானப்படுத்தும் விதமாக முத்துவேலுமிடம் சண்டை போடுகிறார். அது மட்டுமில்லாமல் ராஜி சொன்னதெல்லாம் பொய், பாண்டியன் குடும்பத்தையும் கதிரையும் காப்பாற்ற பெரிய ட்ராமாவா போட்டிருக்கிறார் என்று சக்திவேல் சொல்கிறார்.
உடனே முத்துவேல் கோவப்பட்ட நிலையில் அங்கே பழனிச்சாமி வந்து ராஜி சொன்னது அத்தனையும் உண்மைதான். கல்யாணத்துக்கு முன்னாடி ராஜி வேறொரு பையனை தான் காதலித்தார். நானே ராஜியை கூப்பிட்டு பலமுறை கண்டித்து இருக்கிறேன். அப்படிப்பட்ட ராஜி எப்படி திடீரென்று கதிரை கல்யாணம் பண்ணிட்டு வந்தால் என்று ரொம்ப நாளா யோசித்தேன்.
அதற்கெல்லாம் தீர்வு இன்று ராஜி சொன்ன விஷயம் தான், அதனால் ராஜியை நம்புங்க என்று சொல்லி போய் விடுகிறார். அந்த வகையில் முத்துவேலுக்கு மகள் மீது இருந்த கோபம் கொஞ்சம் குறைய ஆரம்பித்து விட்டது. ஆனால் சக்திவேல் வாய்க்கு வந்தபடி பேசிய பொழுது ராஜியின் சித்தி வடிவு எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்ததையும் ராஜின் மீது இருக்கும் கோபத்தையும் பார்க்கும் பொழுது சக்திவேல் உடன் கூட்டணி போட்டு நெகட்டிவ் ஆக மாற வாய்ப்பு இருக்கிறது.
அடுத்ததாக கோமதி, மீனாவிடம் நல்ல வேலை நம்ம பெயரை ராஜி சொல்லவில்லை என்று சந்தோஷப்பட்டு கொள்கிறார். உடனே ராஜி, கோமதி இடம் மன்னிப்பு கேட்டு நிலையில் அங்க இருந்து தங்கமயில் வந்து என்ன மறுபடியும் உங்களுக்குள்ள ரகசியம் போய்க் கொண்டிருக்கிறது. உங்களுக்கு ராஜியின் கல்யாண கதை ஏற்கனவே தெரியுமா என்று சந்தேகப்படும் அளவிற்கு கேள்வியா கேட்டு நோகடிக்கிறார்.
இதையெல்லாம் சமாளிக்கும் விதமாக மீனா பேசி தங்கமயிலை அனுப்பி விடுகிறார். அடுத்ததாக நகை விஷயத்திற்கும் உண்மையை சொன்னதுக்கும் கதிரிடம் ராஜி மன்னிப்பு கேட்டு பிசினஸுக்கு அடுத்து என்ன பண்ணலாம் என்று கதிருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் கதிரின் பிசினஸுக்கு பாண்டியன் உதவி பண்ணுவார்.