Suriya: சூர்யா என்றாலே ஜோதிகா, ஜோதிகா என்றாலே சூர்யா என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் எவர்கிரீன் சாய்ஸ். ஆனால் இதைத் தாண்டி திரையில் சூர்யாவுக்கு பக்கமாக பொருந்தக்கூடிய ஐந்து நடிகைகள் இருக்கிறார்கள். இது குறித்து ஜோதிகாவே அவருடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார். அந்த ஐந்து பேரை பற்றி பார்க்கலாம்.
சூர்யாவுக்கு கச்சிதமாய் பொருந்தும் 5 நடிகைகள்
சூர்யா-த்ரிஷா: சூர்யாவுக்கு மிகப்பெரிய அளவில் பெண் ரசிகைகள் சேர்ந்தது மௌனம் பேசியதே படத்தில் தான். அதே மாதிரி திரிஷாவுக்கு முதல் வெற்றி படமும் மௌனம் பேசியதே தான். இதனால் இவர்கள் இருவருமே இருவருக்குள்ளும் ஒரு லக்கி சார்ம் தான். தொடர்ந்து ஆறு படமும் இந்த ஜோடிக்கு ஹிட் படமாக அமைந்தது. தற்போது கருப்பு பணத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
சூர்யா-அசின்: கஜினி படத்தில் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சூர்யா மற்றும் அசின் ஜோடி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இந்த ஜோடி இணைந்து வேல் படத்தில் நடித்து மீண்டும் ஒருமுறை தங்களுடைய பெஸ்ட்டான கெமிஸ்ட்ரியை நிரூபித்தார்கள்.
சூர்யா-தமன்னா: சூர்யா மற்றும் தமன்னா இருவரும் அயன் படத்தில் மட்டும் தான் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதே மாதிரி இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் வரும் அன்பே அன்பே, விழி மூடி யோசித்தால் போன்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
சூர்யா-லைலா: நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து, மௌனம் பேசியதே என ஜோதிகாவுக்கு பிறகு சூர்யாவுடன் அதிகம் ஜோடி போட்டது லைலா தான். இந்த இரண்டு ஜோடியும் இணைந்து பிதாமகன் படத்தில் செய்த காமெடியெல்லாம் வேற லெவல். சூர்யாவுடன் நடித்த நடிகைகளில் திரையில் பார்ப்பதற்கு கச்சிதமாய் பொருந்தக் கூடியவர் என ஜோதிகா தன்னுடைய பேட்டியில் லைலாவை தான் சொல்லி இருக்கிறார்.
சூர்யா:சமந்தா: சூர்யா மற்றும் சமந்தா ஜோடி சூர்யாவின் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்த காம்போ என்று கூட சொல்லலாம். இவர்களின் நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் வரும் காதல் ஆசை யாரை விட்டதோ பாடல் ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டையே கலக்கியது என்று சொல்லலாம். இதை தொடர்ந்து இருவரும் இணைந்து 24 என்ற படத்திலும் நடித்தார்கள்.