Mahavatar Narasimma : “மஹாவதார் நரசிம்மா” படம் வெளிவருவதற்கு முன்பு பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் திரையில் ரிலீஸ் ஆனதிற்கு பிறகு திரை உலகம் எங்குமே நரசிம்மாவின் கர்ஜனை சத்தம்தான்.
இசையமைப்பாளர் சாம் cs கூட, இந்த படத்தை பற்றி கூறியிருப்பார். அதாவது இந்த படத்தை யாரும் மதிக்கவில்லை. ரிலீஸ் ஆனதிற்க்கு பிறகு அதற்கான அடையாளத்தை அதுவே உருவாக்கி கொள்ளும் என கூறியிருப்பார். அதே போல இப்போது அடையாளத்தை மட்டுமல்ல பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிகொண்டிருக்கிறது.
திரை உலகை ஆட்டிப்படைக்கும் கம்பீர கர்ஜனை..
அனிமேஷன் படத்திலேயே இந்த “மஹாவதார் நரசிம்மா” படம்தான் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இந்த படம் வெளிவந்து சில நாட்களிலே 210 கோடியை வசூல் செய்துள்ளது அதுவும் உலக அளவில்.
இது அனிமேஷன் துறைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாகும். அதுவும் இந்த வெற்றி என்பது இந்த படக்குழு நிச்சயமாக இந்த “சேவல் பந்தயம் அடிக்கும்” என்ற நம்பிக்கையில் எடுத்தார்களாம். கண்டிப்பாக வசூல் செய்யும் என சொடக்கு போட்டு, கில்லி மாதிரி வசூலை பெற்றுள்ளார்கள்.
210 கோடியையும் தாண்டி இன்னும் அதிக வசூலை பெறப்போகிறது என்றும் துணிந்து சவால் விடுகிறார்களாம் படக்குழு. முன்னணி நடிகர்களை வைத்து எடுத்தாலே படம் 100 கோடி தாண்டுவது கடினம், அப்படி இருக்கையில் இந்த படம் இவ்வளவு ஹிட் ஆகியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த படத்திற்கு அடுத்து நரசிம்மாவின் 9 அவதாரங்களின் படம் தயாராகி கொண்டிருக்கிறதாம். ஒரு அவதாரத்திற்கே நரசிம்மாவின் வசூல் வேட்டை ஆரம்பமாகி விட்டது. இன்னும் 9 அவதாரத்திற்கு என்னன்ன செய்ய போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.