Karuppu-Suriya: ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கருப்பு உருவாகி இருக்கிறது. மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அடுத்தடுத்த தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் அண்ணனுடன் மோத விரும்பாமல் கார்த்தி தன்னுடைய சர்தார் 2 பட ரிலீஸை கூட தள்ளி வைத்தார். ஆனால் இப்போது பார்த்தால் கருப்பு தீபாவளிக்கு வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
இதற்கு காரணம் படத்தின் டிஜிட்டல் வியாபாரம் இன்னும் முடியவில்லை. அது முடிந்தால் மட்டும் தான் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியும். அதனால்தான் இன்று சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியான டீசரில் கூட இது அறிவிக்கப்படவில்லை.
ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட குழப்பம்
இப்போதெல்லாம் டிஜிட்டல் தளங்கள் தான் ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் நிலை இருக்கிறது. அதில் கருப்பு மட்டும் விதிவிலக்கா என்ன. இன்று வெளிவந்த டீசர் மரண மாஸ் ஆக இருக்கிறது.
சொல்லப்போனால் சிங்கம் படத்திற்கு எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருந்ததோ அதேபோல் இருக்கிறது படமும் அப்படித்தான் வந்திருக்கிறதாம். நிச்சயம் சூர்யாவுக்கு இது மிகப்பெரும் வெற்றியாக இருக்கும் என்கின்றனர்.
அதேபோல் டீசரும் வேற லெவலில் இருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்கும் ஆவலுடன் உள்ளனர். ஆனால் அவர்கள் தலையில் இடியை இறக்கியது போல் படம் அடுத்த வருடம் தான் ரிலீஸ் ஆகும் என்ற ஒரு தகவல் வந்துள்ளது.
அப்படி பார்த்தால் இந்த வருட தீபாவளி வசூல் வேட்டையாட கருப்பு வருவது மிகப்பெரும் கேள்விக்குறி தான். ஆனால் எப்போது ரிலீஸ் ஆனாலும் கருப்பு வசூல் வேட்டையாடும் என்பதில் சந்தேகம் இல்லை.