சன் பிக்சர்ஸ் நேற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டனர். கூலி படம் ஒரு பக்கம் வசூலை வாரி குவித்து வருகிறது. மறுபக்கம் அதற்கு தடையாய் இரண்டு காரணங்கள் இருக்கிறது. இதனால் கலாநிதி மாறன் தடையை உடைத்தாக வேண்டுமென வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இதுவரை கிட்டத்தட்ட 400 கோடிகள் வசூலித்த கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி இருந்தனர். இப்படி சான்றிதழ் வழங்கியதால் மேற்கொண்டு வசூலாக கூடிய 100 கோடிகள் துண்டு விழுந்து விட்டது. அது மட்டுமில்லாமல் டிவியில் இந்த படத்தை ஒளிபரப்ப வேண்டுமானால் A சான்றிதழ் இருக்கக் கூடாது,
கூலி படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் 90 கோடிகள் கொடுத்து வாங்கி உள்ளது. இப்படி இவ்வளவு தொகை கொடுத்து வாங்கிய படத்திற்கு ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டதால் அவர்களால் மேற்கொண்டு இதை டிவியில் ஒளிபரப்ப முடியாது இதனாலும் அவர்கள் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர்.
சொல்லப்போனால் சென்னையில் ஃபேமிலி ஆடியன்ஸ் இந்த படத்திற்கு அதிகமாய் வரவில்லை. பல தியேட்டர்களில் குறிப்பாக சங்கம் திரையரங்கில் இது “ஏ” சான்றிதழ் படம் இவ்வளவு வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என நோட்டீஸ் வைத்துள்ளனர். இதனால் குடும்பத்துடன் வருபவர்கள் யோசிக்கிறார்கள்.
சிங்கப்பூரில் ஒரு விநியோகஸ்தர் சுமார் 4.50 கோடிகள் கொடுத்து கூலி படத்தின் உரிமையை வாங்கியுள்ளார். வெளிநாடுகளில் சர்டிபிகேட் விதிமுறை ஃபாலோ பண்ணுவார்கள் அதனால் அங்கு ஸ்ட்ரிக்ட்டாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கே ரீ சென்சார் செய்து திரையிடப்பட்டு வருகிறது.