Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், பணத்தையும் நகையும் கொண்டுட்டு போன சோழன் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என்று நிலா பதட்டம் அடைகிறார். நிலாவின் பதட்டத்தை புரிந்து கொண்ட மனோகர் குடும்பம் இதுதான் சான்ஸ் என்று சோழனை விட்டு நிரந்தரமாக நிலாவை பிரிக்க வேண்டும் என்று சோழனை பற்றி தவறாக சொல்கிறார்கள்.
ஆனாலும் நிலாவுக்கு சோழன் மீது நம்பிக்கை இருப்பதால் பாண்டியனுக்கு போன் பண்ணி விசாரிக்கிறார். பிறகு சேரனுக்கும் போன் பண்ணி கேட்ட பொழுது சோழனுக்கு ஏதோ ஒரு ஆபத்து என்று புரிந்து கொண்டார்கள். உடனே சோழனை கண்டுபிடிக்க வேண்டும் என்று உடன்பிறப்புகள் களத்தில் இறங்கும் விதமாக தேடிப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.
அப்படி பாண்டியன் அவசரமாக பைக்கில் தேடிப் போகும் பொழுது குறுக்கே வந்த கார் பாண்டியனின் பைக்கில் மோதிவிடுகிறது. இதனால் கீழே விழுந்த பாண்டியன் கையில் அடிபட்டு விடுகிறது. உடனே சேரன் அந்த காரில் இருக்கும் நபரை அடிக்கப் போகும் பொழுது காருக்குள் இருக்கும் சோழன் வெளியே இருக்கும் பல்லவனுக்கு முகத்தை காட்டி விடுகிறார்.
அதன் பிறகு பல்லவன், சோழன் அண்ணா காரில் இருக்கிறார் என்று சொன்னதும் சேரன் பாண்டியன் பல்லவன் மூன்று பெரும் சேர்ந்து காரை பாலோ பண்ணி நிறுத்தி விடுகிறார்கள். அதன் பிறகு சண்டை ஆரம்பித்த நிலையில் காருக்குள் இருந்த சோழன் கையை கழட்டி விடும் விதமாக பல்லவன் காப்பாற்றி விடுகிறார். அடுத்து சேரன் சோழன் பாண்டியன் சேர்ந்து அந்த ஆட்களை அடித்து யார் கடத்த சொன்னார் என்று கேட்கிறார்கள்.
அதற்கு அந்த ஆட்கள், மனோகர் பெயரை சொல்லி விடுகிறார்கள். அதன்பிறகு தான் சேரனுக்கும் பாண்டியன் பல்லவனுக்கும் நடந்த உண்மை என்னவென்று புரிய வருகிறது. உடனே அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் சேர்ந்து நிலா வீட்டிற்கு போகிறார்கள். போனதும் நடந்த உண்மை என்னவென்று நிலாவுக்கு புரிய வைத்து மனோகர் மற்றும் தாஸ் முகத்தில் கரியை பூசி விடுகிறார்கள்.