தெலுங்கு இயக்குனர்களுடன் கைகோர்த்த 5 தமிழ் ஹீரோக்கள்.. தனுஷ் தான் ரியல் குபேரன்! – Cinemapettai

Tamil Cinema News

Dhanush : இப்போது பல இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் வந்தாலும் பெரிய நடிகர்கள் தெலுங்கு இயக்குனர்களை நம்பி இறங்கியிருந்தனர். அவர்களுக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைத்தது என்பதை இப்போது பார்க்கலாம்.

முதலாவதாக தெலுங்கு இயக்குனர் வம்சியை நம்பி விஜய் இறங்கிய படம் தான் வாரிசு. இந்த படம் ஒரு ஹிந்தி நாடகம் போல் இருந்ததாக விமர்சனங்கள் வெளியானது. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல வசூலை பெற்றது.

கார்த்தி மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகி இருந்த படம் தான் தோழா. இந்த படத்தை வம்சி இயக்கிய நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி இருந்தது.

தெலுங்கு இயக்குனர்கள் படத்தில் நடித்த ஐந்து தமிழ் ஹீரோக்கள்

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்தது வாத்தி படம். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை தழுவியது.

மேலும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த படம் தான் லக்கி பாஸ்கர். இந்த படம் ஏகபோக வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. அதோடு துல்கர் சல்மானுக்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இப்போது தனுஷ் மற்றும் சேகர் கம்முலா கூட்டணியில் உருவான குபேரா படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ரியல் குபேரனாக தனுஷ் மாறி இருக்கிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.