Theatrical Hits: இப்போதெல்லாம் எதார்த்தமான படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கவனம் பெற தொடங்கி விட்டது. இதற்கு டூரிஸ்ட் ஃபேமிலி படமும் ஒரு முக்கிய காரணம்.
அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே போல் பல படங்கள் வரத் தொடங்கிவிட்டது. இப்படி ஃபீல் குட் படங்களை பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது என ஆடியன்ஸ் சிலாகிக்கும் வகையில் இருக்கிறது.
அதிலும் கடந்த மூன்று வாரங்களாக தியேட்டர்களில் வெளிவரும் படங்கள் அதிக கவனம் பெறுகின்றன. இதில் அதர்வா நடிப்பில் வெளிவந்த டி என் ஏ விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றுள்ளது.
சொந்த வாழ்க்கையை கண்முன் காட்டிய 3BHK
அதேபோல் விஜய் ஆண்டனி நடிப்பில் வந்த மார்கன் படமும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. அது மட்டும் இன்றி கடந்த வாரம் வெளிவந்த மூன்று படங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
சரத்குமார், சித்தார்த், தேவயானி நடிப்பில் வெளிவந்த 3 BHK சொந்த வாழ்க்கையை கண்முன் காட்டியது. அதேபோல் ராம் இயக்கத்தில் சிவா நடிப்பில் வந்த பறந்து போ குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான கதையாக இருக்கிறது.
இந்தப் படத்திற்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இப்படி வன்முறை, பெரிய பட்ஜெட் என எதுவும் இல்லாமல் ஆடியன்ஸை இம்ப்ரஸ் செய்திருக்கிறது இந்த படங்கள்.
மேலும் இந்த மாதிரியான படங்கள் ஒவ்வொரு வாரமும் தியேட்டர்களில் வந்து ஹிட் அடிக்கிறது. இதனால் ஃபேமிலி ஆடியன்ஸின் வரவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.