siddharth : நடிகர் சித்தார்த் அவர்கள் தமிழில் நிறைய படங்கள் செய்து பிரபலமானவர். இவர் நடித்த அத்துணை கதாபாத்திரமும் சற்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும் அதனாலேயே இவருக்கும் இவரின் படத்திற்கும் நல்ல வரவேற்புகள் உள்ளன. “பாய்ஸ்” படத்தில் அறிமுகமாகி இன்று வரை அதே இளமையுடன் கட்சி அளிக்கிறார் சித்தார்த்.
தற்போது இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் 3BHK படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சொந்த வீடு பற்றிய கதை என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்பாருத்தும் என்பதில் எத மாற்றமும் இல்லை. அதுமட்டுமல்லாமல் 2025ல் மக்கள் மனம்கவர்ந்த படங்களின் வரிசையில் 3BHK படமும் இடம்பெறும் என்பதில் மாற்றமில்லை.
எவ்வளவு வயதானாலும் சித்தார்த் அவர்கள் பாய்ஸ் படத்தில் பார்த்தது போலவே இன்றும் தோற்றமளிக்கிறார். வயதானாலும் இளம் வயது போல தோற்றமளிப்பது தான் நடிகர் சித்தார்த் அவர்களின் சிறப்பு என்றே கூறலாம். நாம் இவ்வாறு சித்தார்த் அவர்களை கூறிக் கொண்டிருக்க அவர் எவ்வாறு தன்னை பற்றி வருத்தப்படுகிறார் என்று பார்க்கலாம்.
STR மாதிரி தாடி வளரனும் பாஸ்!
தற்போது நடிகர் சித்தார்த் அவர்கள் அளித்திருந்த பேட்டி ஒன்றில் சிம்புவை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அது மட்டுமல்லாமல் சிம்பு அவர்கள் நடித்த “தொட்டி ஜெயா” படம் போன்று நானும் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஆசை உள்ளது. சிம்பு அவர்களைப் போல் நடிக்க வேண்டும் என்று என் முதல் படத்தில் இருந்து ஏங்கி இருக்கிறேன்.
ஆனால் இந்த தாடி வளராததால் என்னால் அது போன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் தாடி வளர்ந்திருந்தால் நான் வேறு வித்தியாசமான கதைகளையும் தேர்ந்தெடுத்து இருப்பேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார் சித்தார்த். தொட்டி ஜெயா 2 க்கு அடித்தளம் போடுகிறாரா சித்தார்த் என்று தெரியவில்லை.
நடிகர் சித்தார்த் அவர்கள் அடுத்ததாக தனது “சித்தார்த் 40” படத்தையும் ஸ்ரீ கனேஷ் அவர்கள் இயக்கத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியிட இருப்பதாக தகவல் கசிந்து வருகின்றன. இதற்கான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.