Ram Charan : இயக்குனருக்கு ஷங்கருக்கு இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என்று தொடர்ந்து தோல்வி படங்களாக அமைந்தது. ஷங்கர், கமல் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் தான் இந்தியன் 2. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அடுத்ததாக தெலுங்கில் ராம்சரணை வைத்து தில் ராஜு தயாரிப்பில் கேம் சேஞ்சர் படத்தை எடுத்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. இந்த படத்தின் தோல்வி தன்னை பெரிதும் பாதித்ததாக தில் ராஜு கூறியிருந்தார்.
ஆனால் மீண்டும் ராம் சரணை வைத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். சமீபத்தில் தம்முடு படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தில் ராஜு ஒரு சூப்பர் ஹிட் படத்தை ராம்சரணுக்கு கொடுக்க வேண்டும் என்பது ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
மீண்டும் இணையும் கேம் சேஞ்சர் கூட்டணி
இப்போது ராம்சரண் பெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பூச்சி பாபு சனா இயக்கி வருகிறார். இதற்கு அடுத்ததாக தில் ராஜு தயாரிப்பில் ராம்சரண் இணைவார் என எதிர்பார்க்கலாம். இந்த படத்தை கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் அல்லது புஷ்பா பட இயக்குனர் சுகுமார் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சுகுமாருடன் ஏற்கனவே ரங்கஸ்தலம் படத்தில் ராம்சரண் நடித்திருந்தார். தில் ராஜு தயாரிப்பில் பெரிய தோல்வி படம் கொடுத்தாலும் மீண்டும் ராம் சரணை வைத்து வெற்றி படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.
மேலும் இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இது ராம்சரண் ரசிகர்களை மகிழ்ச்சி ஆழ்த்தி இருக்கிறது. தயாரிப்பாளர் தில் ராஜு விஜய்யின் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.