தோழிகளுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு, சைத்ரா சொன்ன விஷயம்.. தனியாக பிரிந்து போன செம்பருத்தி – Cinemapettai

Tamil Cinema News

Chaitra Reddy: விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் அறிமுகமான சைத்ரா நடிப்பின் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் சுவேதா என்ற கேரக்டரில் நடித்தார். இவருடைய கேரக்டர் இதில் நெகட்டிவாக இருந்தாலும் மக்கள் ரசிக்கும்படியாக இவருடைய நடிப்பு இருந்ததால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தார்கள்.

அதிலும் இவருடைய கொஞ்சிக் கொஞ்சி பேசும் தமிழும் ஸ்டைலும் இவருக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கி விட்டது. அந்த சமயத்தில் ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்த ரேஷ்மா, செம்பருத்தி சீரியல் நடித்த ஷபானா மற்றும் யாரடி நீ மோகினி சீரியலில் கதாநாயகியாக வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த நட்சத்திர இவர்களுடன் நட்பு ரீதியாக சைத்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அந்த வகையில் இவர்கள் நான்கு பேரும் நெருங்கிய தோழிகளாக ஒன்று சேர ஆரம்பித்து விட்டார்கள். கொரோனா காலத்தில் கூட இவர்கள் வீட்டிற்குள் சும்மா இருக்காமல் போட்டோ சூட் எடுத்து மக்களிடம் தொடர்ந்து இவர்களுக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டே வந்தார்கள். அப்படிப்பட்ட இவர்கள் தற்போது வெவ்வேறு சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்கள்.

இதில் சைத்ரா சன் டிவியில் கயல் என்ற சீரியலில் நடிக்கிறார். நட்சத்திர செவ்வந்தி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். ரேஷ்மா சன் டிவியில் புத்தம் புது சீரியலிலும் கமிட் ஆகி இருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து ஷபானா விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டு வருகிறார். ஆனால் இதற்கு இடையில் ஷபானாவை தவிர மற்ற மூன்று தோழிகளும் அடிக்கடி வெளியே சுற்றுவது போட்டோ எடுப்பது போன்ற விஷயங்கள் மூலம் சோசியல் மீடியாவில் அடிக்கடி தலையை காட்டினார்கள்.

அப்பொழுதே ரசிகர்கள் சபானா எங்கே, அவர்களும் உங்களுடைய தோழி தானே. ஏன் என்னாச்சு உங்களுடன் ஷபானா வருவதே இல்லை என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்தார்கள். தற்போது இதற்கு பதில் கொடுக்கும் விதமாக சைத்ரா சொன்னது என்னவென்றால் எங்களுக்கும் ஷபானாக்கும் சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் எங்களுடைய நட்பு தொடர முடியவில்லை.

இருந்தாலும் இந்த விரிசல் கூடிய சீக்கிரத்தில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். நண்பர்களுக்குள் சின்ன சின்ன சண்டை மணக்கசப்பு வருவது சகஜம் தான். அப்படிதான் எங்களுக்குள்ளும் வந்திருக்கிறது, ஆனால் இதை இப்படியே விட்டு விட மாட்டோம் கூடிய சீக்கிரத்தில் நாங்கள் மனம் விட்டு பேசி ஒன்று கூடுவோம் என்று சைத்ரா சொல்லி இருக்கிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.