Gossip: கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் நடிகருக்கு மக்களின் செல்வாக்கு அதிகமாகிக் கொண்டே போகிறது. அதை எப்படியாவது உடைக்க வேண்டும் என மற்ற கட்சியினர் தீயாக வேலை பார்த்து வருகின்றனர்.
அதில் நடிகர் களத்தில் இறங்கி அரசியல் செய்யவில்லை என்ற விமர்சனம் தான் அதிகமாக இருந்தது. அதை வைத்து அவரை ஓரங்கட்ட பார்த்தார்கள்.
ஆனால் நடிகர் அதை முறியடித்து விட்டார். சமீபத்தில் காவல் சம்பவத்தில் அநியாயமாக ஒரு உயிர் பறிபோனது. அந்த விஷயத்தில் நடிகர் தன் கண்டனத்தை நேரடியாகவும் பதிவு செய்து விட்டார்.
அவசர ஆலோசனையில் பெரும் புள்ளிகள்
எந்த தலைவரும் நேரடியாக வராத நிலையில் நடிகர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருப்பது மற்ற கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது தொடர்பாக இப்போதுஅவசர ஆலோசனை கூட்டம் கூட நடைபெற்று வருகிறதாம்.
தற்போது நடிகர் தன்னுடைய சொந்த வேலைகளை முடித்துவிட்டு முழுநேர மக்கள் சேவையில் இறங்க இருக்கிறார். அதன் முன்னோட்டம் தான் இது. இன்னும் பல அதிர்ச்சி வைத்தியம் இருக்கிறது என கட்சி தரப்பில் அடுத்தடுத்த செய்திகள் கசிந்து வருகிறது.
ஏற்கனவே நடந்த ஒரு கணக்கெடுப்பில் நடிகர் தான் முன்னணியில் இருந்தார். அதையடுத்து இப்போது மக்களோடு மக்களாக அவர் களம் இறங்கி இருப்பது முக்கிய கட்சியை கொஞ்சம் அசைத்து பார்த்துள்ளதாம்.