Kamal Haasan: பிரபல நடிகை ஒருவர் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் மற்றும் நடிகர் கமலஹாசன் மீதான தன்னுடைய மன கசப்பை பற்றி பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.
கமலஹாசன் உடன் தான் நடித்த அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தாலும், அந்தப் படத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்த கசப்பான நினைவு தான் ஞாபகத்திற்கு வருகிறது என அந்த நடிகை பேசும் வீடியோ தற்போது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
பெரும்பாலும் சினிமாவை பொறுத்த வரைக்கும் படப்பிடிப்பு நடக்கும் போது படம் ஒரு மாதிரி இருக்கும், பார்க்கும்போது வேற மாதிரி இருக்கும் என கலைஞர்கள் சொல்வது உண்டு. பல நடிகைகளும் இந்த மாதிரியான காட்சியை எனக்கு விவரிக்காமலேயே எடுத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டுவது உண்டு.
அப்படித்தான் 90களில் சூப்பர் ஹிட் அடித்து இன்று வரை கமலஹாசனின் கேரியரில் சிறந்த படமாக இருக்கும் இந்தியன் படத்தின் கதாநாயகி சுகன்யாவும் சொல்லி இருக்கிறார்.
பிளாஷ்பேக் காட்சியில் ஆங்கிலேயர்களை எதிர்க்கும் சுகன்யா அவர்களால் தாக்கப்பட்ட ஒரு குகைக்குப் பின்னால் ஆடை இல்லாமல் இருப்பார். அவரை காப்பாற்றும் கமலஹாசன் அவரையே திருமணம் செய்து கொள்வார்.
இதில் கமலஹாசன் தன்னுடைய சட்டையை கழற்றி பின்னால் இருக்கும் சுகன்யாவிடம் கொடுத்துவிட்டு அவர் வெளியே வந்ததும் அவர் நெற்றியில் குங்குமம் வைப்பது போல் காட்சி இருக்கும் என சொல்லப்பட்டதாம்.
ஆனால் படத்தை பார்க்கும் போது சுகன்யா ஆடை இல்லாமல் இருப்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது. இதற்காக பல இடத்தில் முறையிட்டோம், அந்த காட்சியை எங்களால் நீக்க முடியாமல் போனது.
இறுதியாக டெல்லி சென்சார் போர்டுக்கு சென்று கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு அவர்கள் அந்த காட்சியை படத்திலிருந்து நீக்கினார்கள். இன்று வரை இந்தியன் படத்தை நினைத்தால் எனக்கு இந்த மனக்கசப்பான நினைவு தான் ஞாபகத்திற்கு வரும் என சுகன்யா சொல்லி இருக்கிறார்.