Vijay Sethupathi : சமீபகாலமாக சினிமாவில் திடுக்கிடும் செய்திகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகிறது. கேரளாவில் ஹேமா கமிட்டி மூலம் பல நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. அதுவும் பெரிய நடிகர்கள் அதில் சிக்கி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் போ**தை பொருள் உபயோகப்படுத்தியதாக ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் விஜய் சேதுபதி மீது விழுந்திருக்கும் குற்றச்சாட்டு தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறது.
சமீபத்தில் தான் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படம் வெளியாகி தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரம்யா மோகன் என்ற பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டதாக பதிவிட்டு இருக்கிறார்.
விஜய் சேதுபதி மீது குற்றம்சாட்டிய ரம்யா மோகன்

அதாவது கேரவனுக்கு அவரை அழைத்துச் செல்ல இரண்டு லட்சம் மற்றும் துஷ்பிரயோகம் செய்ய 50000 விஜய் சேதுபதி கொடுத்திருக்கிறார். எனக்கு பரிச்சயமான அந்த பெண் மிகவும் பாதிக்கப்பட்டு இப்போது மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார் என்று ரம்யா மோகன் பதிவு போட்டிருக்கிறார்.
ஆனால் அந்த பதிவை சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார். பலரும் இதுகுறித்து உண்மையா என்று கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதில் அளித்து இருக்கும் ரம்யா மோகன் பலர் உண்மையை ஒப்புக்கொள்வதை விட இது உண்மையா என்று ஆராய்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவரை குறை சொல்வது மற்றும் ஆதாரத்தை கேட்பது என்று கவனத்தை செலுத்துகின்றனர். அந்தப் பெண்ணின் வேதனையை பற்றி யாரும் புரிந்து கொள்வதில்லை என்று பதிவிட்டு இருக்கிறார். ஆனால் விஜய் சேதுபதி இதுகுறித்து விளக்கம் கொடுப்பாரா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
திடீரென்று விஜய் சேதுபதி மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது கோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.